அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை
10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியிருக்கு உதவித் தொகை தர நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம்.
நடிகர் விஜய் சென்ற வருடம் தனது தமிழக வெற்றி கழகம் கட்சியை துவங்குவதற்கு முன்பாகவே அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டும் பரிசுப் பொருட்களும் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது அரசியல் கட்சியை துவங்கி இருக்கும் இந்த சமயத்தில் சென்ற ஆண்டு போலவே இந்த வாண்டும் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1500 மாணவ மாணவியருக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சென்ற ஆண்டு நடைபெற்ற குழப்பங்கள் ஏதும் இல்லா வண்ணம் இந்த ஆண்டு 10 நாட்களுக்குள் தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருப்பதால் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆகவும் தனது பிறந்த நாளுக்கு முன்னதாகவும் இந்த விழாவை நடத்துவதற்கான தேதியையும் முடிவு செய்ய மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய பின்பு கட்சி நிர்வாகிகள் சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார். கட்சி சார்பற்ற மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சியில் முதலாவதாக அவர் பேச இருப்பதால் இந்த விழா முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இருக்கும் என தமிழக வெற்றிக்கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலுக்கு வரப்போவதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அத்துடன் கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் தேர்தல் ஆணையத்தில் கொடுத்தார்.
தேர்தல் ஆணையத்திற்கு அளித்த நோட்டீஸில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக ஜோசப் விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த், பொருளாளராக வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளராக ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தகிரா ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நோட்டீஸில், இந்த பதிவு குறித்து யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கலாம் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ