ஹைதராபாத்தில் நடிகை கஸ்தூரி சிக்கியது எப்படி? தகவல் கொடுத்த வீட்டு பணியாளர்கள்
Actress Kasthuri | நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் வைத்து தமிழ்நாடு தனிப்படை காவல்துறை கைது செய்து, சென்னை அழைத்து வந்துள்ளது.
Actress Kasthuri Arrest News | நடிகை கஸ்தூரி அண்மையில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து மிகவும் ஆபாசமாக பேசினார். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஏற்பாடு செய்த பிராமணர்கள் பாதுகாப்புக்கு பிசிஆர் சட்டம் வேண்டும் என்று சென்னை எழும்பூரில் நடத்திய ஆர்ப்பாட்டதில் கஸ்தூரியும் கலந்து கொண்டார். அதில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் தெலுங்கு மொழி பேசுபவர்கள் மன்னர்களின் அந்தபுரத்து சேவைக்கு வந்தவர்கள், அவர்களே தமிழ்களாகும்போது எப்போதோ தமிழ்நாட்டுக்கு வந்த பிராமணர்கள் தமிழர்கள் இல்லையா?. இது என்ன நியாயம்?. பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என சொல்ல நீங்கள் யார்? என நடிகை கஸ்தூரி ஆவேசமாக பேசினார். இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் பிரிவினை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க | ஆந்திராவில் கஸ்தூரி பதுங்கல்! விரைந்தது தனிப்படை...!
தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு காவல்நிலையங்களில் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மனுவும் கொடுத்தனர். சென்னை கோயம்பேடு உள்ளிட்ட காவல்நிலையங்களில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தெரிந்து கொண்ட நடிகை கஸ்தூரி உடனடியாக சென்னை போயஸ்கார்டன் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவானார். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த அவரது வீட்டுக்கு சென்றபோது தான் அவர் வீட்டில் இல்லை என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அவருடைய மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அதுவும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், கஸ்தூரி தலைமறைவானதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.
இதனையடுத்து அவரை கைது செய்ய காவல்துறை தனிப்படை அமைத்தது. சென்னை, ஆந்திரா, டெல்லி என பல்வேறு இடங்களில் கஸ்தூரி இருக்க வாய்ப்பு என காவல்துறையினர் சந்தேகத்தினர். டெல்லியில் முக்கிய பாஜக பிரமுகர் வீட்டில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் மற்றும் பாஜக பிரமுகர் வீட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனடிப்படையில் காவல்துறையினர் கஸ்தூரியை பல்வேறு வழிகளில் தேடினர். கடைசியாக அவர் ஹைதராபாத்தில் இருப்பதை தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படை உறுதி செய்தது.
கஸ்தூரி தங்கியிருக்கும் வீட்டையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஆனால் அவர் வீட்டில் இருக்கிறாரா? இல்லையா? என்பதை உறுதி செய்ய முடியாமல் இருந்தது. அப்போது, கஸ்தூரி வீட்டுக்கு தினம்தோறும் சென்ற பணியாளர்களிடம் காவல்துறை தனித்தனியாக விசாரணை நடத்தியது. அதில் கஸ்தூரி வீட்டுக்குள் இருப்பதையும், அங்கே வெளியே செல்லாமல் இருப்பதையும் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு சென்ற தனிப்படை காவல்துறை வீட்டை திறக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் கஸ்தூரி வீட்டை திறக்காமல் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். சின்ன விசாரணை மட்டுமே என காவல்துறை தரப்பில் தெரிவித்ததையடுத்து கஸ்தூரி கதவை திறந்திருக்கிறார். இதன் பின்னர் அவரை கைது செய்த காவல்துறை வாகனம் மூலம் சாலை மார்க்கமாக சென்னை அழைத்து வந்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட கஸ்தூரியிடம் வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஹைதராபாத் காவல்துறையினரும் நடிகை கஸ்தூரி கைது செய்தபோது உடனிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பெண் பிள்ளைகளின் வாழ்வில் ஒளியேற்றும் புதுமைப் பெண் திட்டம் - சாதனை விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ