தனிப்படை வைத்து கைது செய்ய கஸ்தூரி அப்படி என்ன செய்தார்...? திமுகவை சாடிய சீமான்
Actress Kasthuri Issue: தெலுங்கு மக்களை அவதூறு பேசியதாக நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சீமான் மற்றும் ஹெச். ராஜா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
Actress Kasthuri Issue Latest News Updates: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நடிகை கஸ்தூரிக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று பேசியுள்ளார். ஜெயங்கொண்டமில் அவர் அளித்த பேட்டியில்,"அப்போது நடிகை கஸ்தூரியை தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார். மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும் போது கஸ்தூரியை மட்டும் தனிப்படை அமைத்து கைது செய்தது உள்நோக்கம் கொண்டது" என குற்றம் சாட்டினார். மேலும், இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதேபோல், பாஜக தமிழக பொறுப்பாளர் ஹெச்.ராஜா புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை இதுவரை கைது பண்ண முடியாத காவல்துறை, பிரதமரை தரக்குறைவாக பேசிய தா.மோ. அன்பரசனை இதுவரை கைது செய்யாமல் மந்திரி சபையிலும் வைத்துள்ளனர், ஆனால் கஸ்தூரியை மட்டும் கைது செய்துள்ளனர். அந்த பெண்மணிக்கு தக்க பாதுகாப்பு வேண்டும். நீதித்துறை தான் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கரின் கை உடைக்கப்பட்டது.
வீட்டுக்கு அனுப்ப வேண்டிய அரசாங்கம்
திராவிட கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடம் தந்தது கிடையாது. 1967இல் இருந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த திமுக இதுவரையில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கவில்லை. ரகுபதிக்கு சட்ட ஞானம் இல்லை என நினைத்தேன், அரசியல் ஞானமும் இல்லை என்று இப்போது தெரியவந்துள்ளது. ரகுபதி என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் நிலையான அரசியல் அவருக்கு கிடையாது.
அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு பாதுகாப்பில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் சத்தமே இல்லாமல் உள்ளார். இந்த அரசாங்கம் எல்லாத் துறையிலும் தோற்றபோன வீட்டிற்கு அனுப்ப வேண்டிய அரசாங்கம். பள்ளிக்கல்வித்துறையில் 10,500 ஆசிரியர்கள் போலிகள். கல்லூரிகளில் 980 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருந்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் ஒரு துறை கூட திறமையாக செயல்படவில்லை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டத்தான் முடியும் , ஆனால் செயல்படுத்த வேண்டியது ஆளும் அரசாங்கம்" என ஆளும் திமுக அரசை எதிர்த்து கடுமையாக சாடினார். அதிலும் குறிப்பாக கஸ்தூரிக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசியிருந்தார். தற்போது அர்ஜூன் சம்பத் நடிகை கஸ்தூரி பேசும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில்தான் தலைமறைவாகவில்லை எனவும், படப்பிடிப்பு முடிந்து தான் என் வீட்டிற்கு திரும்பிய போதே போலீசார் வந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பேட்டியில் விஜய் படத்தை காட்டிய இளைஞர் - வானதி ஸ்ரீனிவான் சொன்ன பதில்!
கஸ்தூரி பிடிப்பட்டது எப்படி?
முன்னதாாக, பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி திமுக மற்றும் தெலுங்கு மக்களை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை கிளம்பியது. தொடர்ந்து, அவருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதனால், ஏராளமான புகார்கள் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டன. எழும்பூர் காவல் நிலையத்தில், நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில், இரு குழுக்களை மோதிக்கொள்ள தூண்டும் வகையில் பேசுதல், சாதி, இனமொழி தொடர்பான கருத்துக்கள் வெளியிடுதல், வதந்தி பரப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கும். இதற்கிடையில், ஜாமீன் பெற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்தது. ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சம்மன் அனுப்பி போலீசார் சென்றபோது வீடு பூட்டியிருந்தது மற்றும் அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
சிறையில் நடிகை கஸ்தூரி
தற்போதைய விசாரணையின் அடிப்படையில், ஹைதராபாத் அருகே தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் என்பவர் வீட்டில் நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி, நடிகை கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்டு, சாலை வழியாக இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பின், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணை முடிந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் படிக்க | ஹைதராபாத்தில் நடிகை கஸ்தூரி சிக்கியது எப்படி? தகவல் கொடுத்த வீட்டு பணியாளர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ