பெரம்பலூர் அருகே அதிமுக பிரமுகர் ஒருவர் தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ். நாரணமங்கலம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவராகவும், தற்போது அதிமுக ஊராட்சி செயலாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு பெரம்பலூர் மாவட்டம்,  திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலத்தூர்கேட் என்ற கிராமத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்ற ரெங்கராஜ்  புதுக்குறிச்சி கிராமத்திற்கு அருகே முன் நெற்றிப் பகுதியில்  பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். 



மேலும் படிக்க | விசிக - பாஜக மோதல்: நிபந்தனை முன் ஜாமீன் பெற்ற காயத்ரி ரகுராம்!


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார் அமரர் ஊர்தியை வரவழைத்து ரெங்கராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்க முற்ப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரெங்கராஜின் உறவினர்கள் போலீசார் முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.


இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது, இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் அங்கு கூடியிருந்தவர்களிடம் காவல்துறை எவ்வித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, ரெங்கராஜின் உடலை உடற்கூறாய்வுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


மேலும் படிக்க | பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!


இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பாடாலூர் போலீசார் ரெங்கராஜ் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே அதிமுக பிரமுகர் ஒருவர் தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR