விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் எம்ஜிஆர் - போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு!
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்காக போஸ்டர்கள் ஒட்டியும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
நேரடி அரசியலுக்கு வா-என் ஆன்மா என்றும் உனக்கு துணை நிற்கும் என எம்ஜிஆர் நடிகர் விஜயை அரசியலுக்கு அழைப்பது போல ரசிகர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்க தொண்டர்கள் மூலம் பல சேவைகளை செய்து வருகிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்காக போஸ்டர்கள் ஒட்டியும் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் விஜய்யின் பிறந்தநாள் நேரத்தில் ஏதாவது முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இந்த நிலையில்தான் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை விஜய் நடத்தி உள்ளார்.
மேலும் படிக்க | மாணவர்கள் மத்தியில் தனுஷின் அசுரன் பட வசனத்தை பேசிய விஜய்!
தொடர்ந்து தனது நடவடிக்கைகள் மூலம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்துவதாக விமர்சகர்கள் கருந்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் நடிகர் விஜயை அரசியலுக்கு அழைப்பது போல அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் தலைமை செயலக படத்துடன் வெள்ளை சட்டை வேட்டியில் விஜய் மீது எம்ஜிஆர் தோள் மீது கை வைத்த படங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், அந்த போஸ்டரில் நடிகர் விஜய்யிடம் எம்ஜிஆர்பேசுவது போல, தம்பி விஜய் எப்படி இருக்கீங்க, உனக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள், நீ சீக்கிரம் நேரடி அரசியலுக்கு வா, உன் தந்தையாரை ஆலோசகராக வைத்துக்கொள், என் ஆன்மா உனக்கு துணையாய் இருக்கும், நான் தந்த ஏழைகளுக்கா ன ஆட்சியை உன்னால் தர முடியும் என நம்புகிறேன், மாற்றத்தை விரும்பும் மக்களும், உன்னுடைய ரசிகர்களும் இணைந்து உன்னை தமிழக ஜார்ஜ் கோட்டையில் அமர வைப்பார்கள் விஜய் என எம்ஜிஆர் கூறுவது போல போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10, 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு தொகுதி வாரியாக ஊக்கதொகை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்க விஜய் ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. காலை முதலே மாணவர்களும், பெற்றோர்களும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தனர்.
மேலும் படிக்க | பெரியார், அம்பேத்கர், காமராஜர் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள் - விஜய்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ