பெரியார், அம்பேத்கர், காமராஜர் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள் - விஜய்

அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவிகளிடம் உரையாற்றிய நடிகர் விஜய், பெரியார் அம்பேத்கர் மற்றும் காமராஜர் ஆகியோரை படிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 17, 2023, 12:22 PM IST
  • மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய்
  • பெரியார் அம்பேத்கர் காமராஜரை படிக்க அறிவுறுத்தல்
  • நாளைய வாக்காளர்கள் என குறிப்பிட்டு பேச்சு
பெரியார், அம்பேத்கர், காமராஜர் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள் - விஜய் title=

பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவிகளை கவுரவிக்கும் விதமாக சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யயப்பட்ட இந்த விழாவில் 234 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நடிகர் விஜய் ரசிகர்கள் புடைசூழ விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவருக்கு மாணவ மாணவிகள் மற்றும் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி வரவேற்பு கொடுத்தனர்.
 
மேடையில் விஜய்

விழா அரங்குக்கு வந்த விஜய் நேரடியாக மேடைக்கு சென்று அங்கு குழுமியிருந்தவர்களுக்கு கை அசைத்து தன்னுடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார். பின்னர், மாணவ, மாணவிகளுடன் போடப்பட்டு நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டார். அப்போது மாற்றுத் திறனாளி மாணவர் தான் வரைந்த ஓவியத்தை விஜய்க்கு பரிசாக கொடுத்தார். அதனை பெற்றுக் கொண்ட அவர், மாணவனை வெகுவாக நெகிழ்ந்து பாராட்டினார். 

மேலும் படிக்க | மாணவர்கள் மத்தியில் தனுஷின் அசுரன் பட வசனத்தை பேசிய விஜய்!

நாளைய வாக்காளர்கள்

பின்னர் மேடையேறிய விஜய் மாணவ மாணவிகளுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை பேசினார். அவர் பேசும்போது, கல்வி தான் ஒருவரை வாழ்க்கையில் முன்னேற்றும். அதனால் அதனை நன்றாக பிடித்துக் கொள்ளுங்கள் என்றார். நாளைய வாக்காளர்கள் என்பதால், வாக்குக்கு பணம் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். பெற்றோருக்கும் இதனை சொல்லுங்கள். வாக்குக்கு பணம் கொடுப்பவர்கள் எவ்வளவு சம்பாதித்திருப்பார், ஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபாய் என்றால் ஒரு தொகுதிக்கு, ஒருமாநிலத்தில் எவ்வளவு செலவு செய்வார்கள்? என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என கூறினார் விஜய். 

பெரியார் அம்பேகர் படியுங்கள்

படிப்பைக் கடந்து வெளியில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்திய அவர், சமூக ஊடகங்களில் நிறைய போலிச் செய்திகள் இருப்பதாக அடிக்கோடிட்டுக் காட்டினார். அதனை மாணவர்கள் ஆய்ந்து தெளியுமாறுக் கேட்டுக் கொண்ட விஜய், அதற்காக நிறைய படிக்க வேண்டும் என தெரிவித்தார். சமூகத்தைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜரை படியுங்கள் என மாணவ, மாணவிகளைக் கேட்டுக் கொண்டார். அவரின் இந்தப் பேச்சு சமூக வெளியிலும், அரசியல் களத்திலும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு விசாரிக்க அனுமதி! ஆனால் நீதிபதி வைத்த ட்விஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News