நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பா.ஜ.க கூட்டணி தொடருமா?
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க கூட்டணியை தொடருவது குறித்து அதிமுக இன்று மாலை முக்கிய முடிவை எடுக்க உள்ளது
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக இன்று மாலை ஆலோசனை நடத்துகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
ALSO READ | தமிழகத்தில் ’மினி எமர்ஜென்சி’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்
அதில், தேர்தல் வியூகம் மற்றும் பா.ஜ.க கூட்டணியில் தொடருவது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். குறிப்பாக, நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து அதிமுக தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். தஞ்சை மாணவி தற்கொலைக்கு நீதிகேட்டு பா.ஜ.க சார்பில் சென்னையில் நடத்திய போராட்டத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியதை அதிமுக விரும்பவில்லை.
கடும் அதிருப்தியில் இருக்கும் அதிமுக மூத்த தலைவர்கள் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது கூட்டணியுடன் போட்டியிடலாமா? என்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர். ஏற்கனவே கூட்டணியில் இருந்து பா.ம.க வெளியேறியிருக்கும் நிலையில், இப்போது பா.ஜ.கவுடனான கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு இந்த கூட்டத்துக்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | Lockdown: கல்லூரித் தேர்வுகள் ஆன்லைனில்! வகுப்புகள் ஆஃப்லைனில்...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR