தமிழகம் முழுவதும் அதிமுகவின் உட்கட்சி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி காஞ்சிபுரம் மாங்காடு பேரூராட்சியில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான விருப்பமனு பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் வீடு தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அதிமுக மேல்முறையீடு செய்யும் என்றார். எதிர்கட்சியாக இருக்கும்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஆட்சிக்கு எதிராகவும், மு.க.ஸ்டாலினை விமர்சிப்பவர்கள் மீதும் வழக்குகளை போடுவதாக ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
ALSO READ | பள்ளியில் புகுந்து வெறிநாய் கடித்ததில் 2 மாணவர்கள் படுகாயம்
தொடர்ந்து பேசிய அவர், " தமிழகத்தில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி நடைபெறுகிறது. கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது திமுக தலைமையிலான அரசு. திமுக ஆட்சியில் திறக்கக்கூடிய பாலங்கள், கட்டடங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டவை. மக்களுக்காக புதிய திட்டங்கள் ஒன்று கூட திமுக அரசு கொண்டுவரவில்லை. பொட்டாஷ் உரம், கட்டுமான பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து மக்கள் அவதிப்பட்டுபருகிறார்கள்.
ஆளுநரை பொறுத்தவரை அவரின் செயல்பாடுகள் எல்லாமே அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுகிறார். அதில் மாற்று கருத்து இல்லை. தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை அவரது மருமகன் சபரீசன் தான் ஆட்சி செய்கிறார். நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அவர்களது கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைகள் எதற்கும் குரல் கொடுப்பதில்லை. மொத்தத்தில் தமிழக மக்களின் அதிருப்தியை பெற்ற கட்சியாக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் திமுக செயல்பாடுகள் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெரும்" என தெரிவித்தார்.
ALSO READ | ’பா.ஜ.க வழியில் திமுக’ சீமான் கடும் விமர்சனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR