திமுக அரசை வசமாக ஏமாற்றிய அதிமுக நிர்வாகி! இடையில் ஒரு வங்கிமோசடி
வெளிநாட்டில் இருப்பவர் பெயரில் நாமக்கல்லில் பயிர் கடன் வாங்கி மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் சகோதரர் பெயரில் கூட்டுறவு கடன் சங்கத்தில் போலியாக கணக்கு தொடங்கி ரூ.1.50 லட்சம் பயிர் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டுறவு சங்க பதிவாளரிடம் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் புகார் அளித்துள்ளார்.
நாமக்கல்லில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நாமக்கல் மாவட்டம் ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கடன் சங்கத்தில் கடந்த 2018, 2019,2020 ஆகிய ஆண்டுகளில் தலைவராக இருந்தவர் ஏ.சி.மணி. இவர் தற்போது அதிமுக மோகனூர் ஒன்றிய அவைத்தலைவராக இருந்து வருகிறார்.
மேலும் படிக்க | கூகுள், அமேசான், ஏர்டெல்... ஐபிஎல் உரிமையை கைப்பற்றப்போவது யார்?
இவர் வெளிநாட்டில் இருக்கும் தனது சகோதரர் சுப்ரமணி என்பவர் பெயரில் போலி கையெழுத்திட்டு கணக்கு தொடங்கி ரூ.1,50,000 வட்டியில்லா பயிர் கடன் பெற்று மோசடி செய்துள்ளார்.
அவர் வாங்கிய கடன் தொகை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. இவர் இதுபோன்று மூன்று முறை வட்டியில்லா கடன் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வெளிநாட்டில் இருப்பவருக்கு பயிர் கடன் வழங்கிய அதிமுக பிரமுகர் ஏ.சி.மணி மீது நடவடிக்கை எடுக்க கோரி வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | 40 வருஷத்துக்கு முன்னாடியே வந்த கமல்ஹாசனின் Multiverse மூவி!- என்ன படம்னு தெரியுமா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR