3 ஆண்டுகளுக்கு பிறகு 109 அடியை எட்டியிருக்கிறது மேட்டூர் அணை
3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் 109 அடியை எட்டி உள்ள நிலையில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் 109 அடியை எட்டி உள்ள நிலையில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டாக்டர் சரோஜா, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செம்மலை உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 109 அடியை எட்டி உள்ளது. மேட்டூர் அணை ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,04,436 கன அடியில் இருந்து 1,01,277 கன அடியாக குறைந்தது. நீர் இருப்பு 76.99 டி.எம்.சி., குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.