‘மீண்டும் மோடி சர்க்கார் ’ ... பிரம்மாண்ட மேடையில் நாளை நந்தனத்தில் பாஜக பொதுக்கூட்டம்!
PM Modi`s Chennai Visit: பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ள நிலையில், அவர் பங்கேற்க உள்ள நந்தனம் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
PM Modi's Chennai Visit: பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ள நிலையில், அவர் பங்கேற்க உள்ள நந்தனம் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி நாளை மாலை 5 மணியளவில் தாமரை மாநாடு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டை குறி வைத்து பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது. கடந்த 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலை பாத யாத்திரையின் நிறைவு விழா கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 6 நாட்களுக்குள் மீண்டும் தமிழகம் வருவது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நந்தனத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
சென்னை நந்தனத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு ‘மீண்டும் மோடி சர்க்கார்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. திமுக பொதுக்கூட்டத்திற்கு நிகராக மக்களை திரட்டி பிரம்மாண்டமாக பிரதமர் மோடி (PM Narendra Modi) பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை நடத்தும் பொறுப்பு பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையின் பாஜக வேட்பாளராக அவர் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், பொதுக்கூட்டத்திற்கான பணிகளை வினோஜ் ஒருங்கிணைத்து வருகிறார்.
ரூ.400 கோடி மதிப்பீட்டிலான கல்பாக்கம் அணுமின் நிலைய திட்டம்
மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டு நாளை மதியம் 1.15 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த பின், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் முதலில் கல்பாக்கம் சென்று, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கல்பாக்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.
மேலும் படிக்க | பாஜக வேட்பாளர்கள் பட்டியல்... 195 மக்களவைத் தொகுதிகளுக்கான பட்டியல் வெளியீடு
பெரும் எதிர்பார்ப்பௌ ஏற்படுத்தியுள்ள பொது கூட்டம்
ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி சென்னையை நாளை அதிர செய்ய வேண்டும் என முனைப்பில் பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் முனைப்பாக பொதுக்கூட்டத்திற்கு பணியாற்றி வருகின்றனர். நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சென்னையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்
பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி, 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நடைபெறும் சென்னை, நந்தனம், YMCA மைதானம், சென்னை விமான நிலையம் மற்றும் சுற்றுப்புறங்களிலும், பிரதமர் பயணிக்கும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், அண்ணாசாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வாகன ஓட்டிகள் அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக
முன்னதாக நேற்று, பாரதீய ஜனதா கட்சி, மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில், நாட்டின் 16 மாநிலங்களில் உள்ள 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் எதிர்பார்க்கப்பட்ட பல பெயர்கள் இருந்தாலும் சில எம்பிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதற்கு பதிலாக சில புதிய முகங்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி; டெல்லியில் காவல்துறைக் கண்காணிப்பு தீவிரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ