கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீயாக பரவி வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்றின் அளவு அதிகரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த வித பாகுபாடும் இல்லாமல் கொரோனா தொற்று அனைவரையும் சமமாக பாவித்து தன் பிடியில் சிக்கவைத்து வருகிறது.


தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு (C Vijayabaskar) கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 


தனக்கு கொரோனா தொற்று (Coronavirus) உறுதியானதை ட்விட்டர் மூலம் உறுதி செய்த விஜயபாஸ்கர், " 'பொது சுகாதார பரிசோதனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகு என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்'' என்று கூறியுள்ளார். 



ALSO READ: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி


சி. விஜயபாஸ்கர், நடந்து முடிந்த தேர்தலில் (TN Election) விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் பணிகள் மற்றும் கொரோனா நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.


முன்னதாக, ஒரு சுகாதாரத் துறை அமைச்சராக சி. விஜயபாஸ்கர் ஆற்றிய பணிகள் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. குறிப்பாக, அதிமுக ஆட்சிக்காலத்தில், கொரோனா தொற்றின் போதும், பல வெள்ள அபாயங்களின் போதும், அவர் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார், மக்களின் பாராட்டுதல்களையும் பெற்றார்.


ALSO READ: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR