கொரோனா காலத்திலும் மது விற்பனையை அனுமதிப்பது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கச் செய்யும் மதுபானங்கள் விற்பனையை தொடர்வது ஏன்? என கேள்வி எழுப்பிய நாதுரை கிளை உயர் நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 5, 2021, 02:38 PM IST
  • நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது.
  • கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
  • மதுபானக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகின்றன.
கொரோனா காலத்திலும் மது விற்பனையை அனுமதிப்பது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி title=

மதுரை: கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும் மதுபானங்கள் விற்கப்படுவதை அனுமதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியதோடு, அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை ஒத்தி வைத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை (Madras High Court Madurai Bench) நீதிபதிகள். 

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு (Government of Tamil Nadu) அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றது. அதாவது புதிய நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கை மே 6-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 20-ம் தேதி அதிகாலை 4 மணி வரை விதிக்கப்படுகின்றன எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், டாஸ்மாக் கடைகளுக்கு (Tasmac Shop) எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று பலர் கேள்வி எழுப்பினர்.

ALSO READ |  மதுப்பிரியர்களின் கவனத்திற்கு, டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

இந்தநிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் சூழலில் கோயில்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுபான கடைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. தினந்தோறும் மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும் மதுபானங்கள் விற்கப்படுவதை அனுமதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியதோடு, இதுத்தொடர்பாக மத்திய, மாநில உள்துறை செயலாளர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இந்த மனு மீதான விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் மதுபானக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ |  புதுச்சேரியில் மதுபானக்கடைகளை மூட அரசு உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடர முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News