அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை
தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவருடைய வீடுகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதன் அடிப்படையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை லஞ்ச ஒழிப்பு துறையால் திங்கட்கிழமையான இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க | 2000 நோட்டை வாபஸ் பெறுவது இவர்களுக்கு தான் பிரச்னை - அண்ணாமலையின் விளக்கம் இதோ!
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 17 10 2021 ஆம் ஆண்டு புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், 35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி ரம்யா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இந்த வழக்கு மீதான விசாரணை லஞ்ச ஒழிப்பு துறையால் போலீசாரால் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில்லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்கங்களைக் கொண்ட குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் மீதான வழக்குகள் வேகமெடுக்க தொடங்கியிருக்கின்றன. இது அரசியல் களத்தில் எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | காதலர்கள் தங்கி இருந்த அறையில் நுழைந்து ரூம் பாய் செய்த செயல்! அதிர்ச்சி சம்பவம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ