காதலர்கள் தங்கி இருந்த அறையில் நுழைந்து ரூம் பாய் செய்த செயல்! அதிர்ச்சி சம்பவம்!

கூவத்தூர் அருகில் உள்ள பண்ணை வீட்டில் காதல் ஜோடியினர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து காதலன் போல் பெண்ணிடம் சல்லாபத்தில் ஈடுபட்ட ரூம் பாய்க்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஓப்படைத்த விருந்தினர்கள்.  

Written by - RK Spark | Last Updated : May 22, 2023, 08:01 AM IST
  • பெண்கள் குளிக்கும் காட்சியை வீடியோ எடுத்த ரூம் பாய்.
  • போலீசாரின் விசாரணையில் அம்பலம்.
  • விருந்தினர்கள் தாக்கியதில் ரூம் பாய் மருத்துவமனையில் அனுமதி.
காதலர்கள் தங்கி இருந்த அறையில் நுழைந்து ரூம் பாய் செய்த செயல்! அதிர்ச்சி சம்பவம்!  title=

கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்துள்ள பரமன்கேனி பகுதியில் (பேர்ல் பீச் எனும் பெயரில்) சினிமா பட நடிகையின் (காதல் பட சந்தியா) கணவர் வெங்கடேசன் என்பவர் ஒரு பண்ணை வீடு நடத்தி வருகிறார். இந்த பண்ணை வீடுகளில் நீச்சல் குளத்துடன் வில்லா வீடுகள் உள்ளன.  சனி, ஞாயிறு போன்ற வர இறுதி நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த பலர் வந்து இந்த வில்லா வீடுகளில் தங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை அன்று (சனி, ஞாயிறு இரு தினங்கள்) இந்த வில்லா வீடுகளில் தங்குவதற்காக  சென்னை கே.கே. நகர் பகுதியை சேந்த இன்டீரியர் டெகரேட் காண்டிராக்டர் ராமு(வயது25) என்பவர் தனது நட்பு வட்டாரத்தை சேர்ந்த நான்கு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்குவதற்காக 3 (வில்லா) அறைகள் பதிவு செய்து மொத்தம் 8 பேர் வந்து தங்கினர். ஒரு அறையில் ராமு(வயது25) அவரது காதலி சோனாலி(வயது22) ஆகியோர் தங்கினர். 

இந்நிலையில் அந்த பண்ணை வீட்டில் ரூம் பாய்-யாக வேலை செய்யும் சீக்கினாங்குப்பம் பகுதியை சோந்த சுபாஷ்(வயது23) என்பவர் ராமு தங்கியுள்ள அறைகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்று சுத்தம் செய்து கொடுத்துள்ளார். இவர்கள் தங்கியுள்ள அறையில் உள் பக்கம் தாழிட்டாலும், வெளியே திறக்கும் வசதி கொண்ட தாழ்ப்பாள் வசதி கொண்ட அறையாகும். இந்நிலையில் சனி (நேற்று) இரவன்று ராமுவும், சந்தியாவும் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும்போது ரூம்பாய் சுபாஷ் அந்த அறைக்குள் புகுந்து பெட்டில் தூங்கி கொண்டிருந்த சோனாலியிடம் காதலன் போல் பாலியல் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளார். தனது காதலன் தன்னிடம் இது மாதிரி ஈடுபடமாட்டரே என சந்தேகமடைந்து, ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்த (சோனாலி) அந்த பெண் சுதாரித்து எழுந்து அறையின் லைட் போட்டுள்ளார். அப்போது ராமு அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

மேலும் படிக்க | மதுபான கடைகளில் 40% போலி மதுபானங்கள் தான் விற்பனை - கே.பி.ராமலிங்கம்!

பிறகு தன்னிடம் யார் சல்லாபத்தில் ஈடுபட்டது என சந்தேகமடைந்து, கட்டில் அடியில் பார்த்தபோது சுபாஷ் மறைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அப்போது அயர்ந்து தூக்கத்தில் இருந்து எழுந்த ராமுவிடம், நடந்த சம்பவத்தை சோனாலி கூறவே ராமு, சுபாசை வெளியே இழுத்து வந்து தர்ம அடி கொடுத்தார். பிறகு கூவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து தர்ம கொடுத்ததால் காயமடைந்த நிலையில் காணப்பட்ட சுபாசை கைது செய்து செய்து செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சுபாசின் செல்போனை வாங்கி பார்த்து பரிசோதனை செய்த போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியான பல தகவல்கள் கிடைத்தன. 

அவர் அந்த பண்ணை வீட்டில்(ரூம்) தங்கும் பெண்கள் குளிக்கும்போதும், உடைகள் மாற்றும்போதும் வீடியோ எடுத்து ரசித்த காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. இதற்கிடையில் சுபாஷ் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சீக்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சிலர் கூவத்தூர் காவல் நிலையத்தில் கலாட்டா செய்ததில், அவரை(சுபாஷ்) தாக்கியதாக பண்ணை வீட்டில் தங்கிய விருந்தினர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் விருந்தினர்கள் தாக்கியதால் மருத்துவ சிகிச்சையில் சுபாஷ் உள்ளதால் காயம் குணமடைந்து அவரிடம் விசாரித்தால் மேலும் இந்த பண்ணை வீட்டில தங்கிய வேறு பெண்களிடம் இவர் இதுபோல் இரவு நேரத்தில் அறைகளில் அத்துமீறி நுழைந்து காதலன் போல் இருட்டில் சல்லாபத்தில் ஈடுபட்டாரா என பல தகவல்கள் வெளிவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | புதுமைப் பெண் திட்டம்: திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டம் - உயர்க்கல்வியால் உயரும் பெண்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News