முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினரோடு சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று (டிச. 4) மரியாதை செலுத்த வருகை தந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் செய்தியாளரிடம் பேசிய கே.சி.பழனிசாமி,"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்றுதான். எனவே இன்றைக்கு நாங்கள் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறோம்.


இபிஎஸ் ஓபிஎஸ் ஏற்க வேண்டும் 


ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அதை அமைக்க வலியுறுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே இவர்கள் இருவரும் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆணையத்தின் அறிக்கையில் ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதி மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க | நிர்வாணமாக நின்றால் கேசவ விநாயகம் என்ன செய்வார் தெரியுமா?... பாஜக பெண் நிர்வாகி பகீர்


இன்று வரையில் அவர்கள் இருவரும் ஆணையத்தின் அறிக்கையை அதில் குறிப்பிட்டுள்ள தேதியை நாங்கள் ஏற்கவில்லை என்று எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அடுத்த ஆண்டில் இருந்தாவது உண்மையான நினைவு நாளான டிசம்பர் 4ஆம் தேதியை ஜெயலலிதாவின் நினைவு நாளாக கடைபிடிக்க வேண்டும்.


அதேபோன்று, கொடநாடு சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தில் முறையான விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். தமிழக அரசும், மத்திய அரசும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை டிசம்பர் 4ஆம் தேதி என்று திருத்தம் செய்ய வேண்டும்" என்று கூறினார்.


மேலும் படிக்க | 'அன்றும் இன்றும் என்றும் கோயில் மக்களுக்கானது' - அழுத்திக் கூறிய முதல்வர் ஸ்டாலின்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ