சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (டிச. 4) நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மங்கல நாண் வழங்கி திருமணங்களை நடத்தி வைத்தார். தாலியுடன் 30 சீர்வரிசைப் பொருட்களையும் முதலமைச்சர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து, விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,"கோவை சுற்றுப்பயணம் முடித்துவிட்டு நேற்றிரவுதான் (டிச. 3) சென்னை திரும்பினேன். அந்த களைப்புகள் எல்லாம் போகவே இங்கு வந்தேன். நான் ஏற்கனவே பல கூட்டங்களில் சொன்னது போல அமைச்சர் சேகர்பாபு செயல்பாபுவாகவே செயல்பட்டு வருகிறார். மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி கோயில் என்பது மக்களுக்காகத்தான், கோவில் யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது. அரசியல் செய்ய எதுவும் கிடைக்காததால் சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.
பெரியார் நெஞ்சில் தைத்த முள்...
அறநிலையத்துறை கோயிலில் 47 கோயில்களில் அன்னைத் தமிழ் அர்ச்சனை உரிமை மீட்கப்பட்டுள்ளது. மேலும், இதைப் பல கோயில்களில் இதை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். கோயில் பொதுச் சொத்து விவரங்கள் இணையத்தில் பதிவு செய்துள்ளோம்.
மேலும் படிக்க | திராவிட மாடலை உருவாக்கியது யார்?... இபிஎஸ் பேச்சுக்கு உதயநிதி ரிப்ளை
#LIVE: @KSundarMLA அவர்களது இல்லத் திருமண விழாவுக்குத் தலைமை தாங்கிச் சிறப்புரை https://t.co/IqNTK7xC8H
— M.K.Stalin (@mkstalin) December 4, 2022
ரூபாய் 3,700 கோடி மதிப்பிலான பொதுக்கேயில் ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பதைச் செயல்படுத்தியுள்ளோம்.. இதுபோன்ற சமத்துவத்தை விரும்பாத சில சக்திகள் இதைத் தடுக்க முயன்றாலும் அதை எதிர்த்தும் வழக்கு நடத்தி வருகிறோம்..
ஆதாரம் எதுவும் இன்றி குற்றச்சாட்டுக்களை சிலர் கூறி வருகின்றனர். அமைச்சர்களை முதலமைச்சர் வேலை வாங்குவதை பார்த்து இருக்கிறோம், முதலமைச்சரையே வேகமாக வேலை வாங்க கூடியவர் அமைச்சர் சேகர்பாபு. இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சாதனைகளை அவர் புரிந்து வருகிறார். தமிழகத்தில இதுவரை இல்லாத அளவிற்கு கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைவருக்குமான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
நாம் இருவர் நமக்கு ஏன் மற்றொருவர்
இந்த ஆட்சி, எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் நடைபெற்று வருகிறது. மணமக்கள் ஒன்றோ இரண்டோ குழந்தையுடன் நிப்பாட்டிக் கொள்ள வேண்டும், அளவான குழந்தைகளை பெற்று அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்திற்கு பெருமளவு செலவு செய்து வருகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் இன்று (4.12.2022) சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.#CMMKStalin #TNDIPR pic.twitter.com/95zYqAKeY3
— TN DIPR (@TNDIPRNEWS) December 4, 2022
முன்பெல்லாம் நாம் இருவர் நமக்கு மூவர் என்று சொன்னோம். அது பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர் என்றும், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றும் மாறியது. தற்போது நாம் இருவர் நமக்கு எதுக்கு மற்றொருவர் என கூறப்படுகிறது" என்றார்.
மேலும் படிக்க | 'பாரத் மாதா கி ஜே' திமுக எம்பி பேசும்போது பாஜகவினர் கூச்சல்... மேடையில் எல்.முருகன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ