சென்னை பல்லவன் இல்லம் அருகே மறைந்த அதிமுக நிர்வாகி தனசேகரின் நினைவு கோப்பை கால்பந்து போட்டியினை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது, வீரர்களுடன் கால்பந்தாடி மகிழ்ந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமியின் அதரவாளரான இவர், ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். ஜெயக்குமார் பேசும்போது, " பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். அதிமுக என்ற கட்சி தலைவர்களை நம்பியோ, சட்டமன்ற உறுப்பினர்களை நம்பியோ, எம்பிக்களை நம்பியோ ஆரம்பிக்கப்படவில்லை. தொண்டர்களை நம்பித்தான் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தமர் போல பேசும் மகா நடிகர் ஓ.பன்னீர்செல்வம். அவர் நடிகராக இருந்திருந்தால் ரஜினி சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்று இருப்பார். நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்ற எண்ணத்தில் பன்னீர் செல்வத்தின் செயல்பாடு இருந்தது. அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எடப்பாடி கே பழனிச்சாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர் செல்வத்துக்கு, அதிமுகவில் என்றுமே இடம் கிடையாது. கரந்த பால் மடியேறாது.. கருவாடு மீனாகாது. 


பன்னீர் செல்வத்தின் செயல்பாடு அதிமுகவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பன்னீர் மேற்கொள்வது புரட்சி பயணம் அல்ல, மிரட்சி பயணம். ஜெயலலிதா மரண அறிக்கையை வெளியிட வேண்டிய கடமை திமுக அரசுக்கு உண்டு. ஜெயலலிதா மரணம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் சசிகலா, விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியமளிக்காத்து ஏன்?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். 


மேலும் படிக்க | சசிகலா, டிடிவி தினகரனை நானே நேரில் சந்திப்பேன் - ஓ.பி.எஸ் தடாலடி அறிவிப்பு


மேலும் படிக்க | தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கவில்லை - மத்திய அமைச்சர் தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ