சசிகலா, டிடிவி தினகரனை நானே நேரில் சந்திப்பேன் - ஓ.பி.எஸ் தடாலடி அறிவிப்பு

அதிமுகவின் நலன் கருதி சசிகலா மற்றும் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து நானே அழைப்பு விடுப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 27, 2022, 08:12 PM IST
  • எடப்பாடி ஆதரவாளர் ஓ.பிஎஸ்ஸூக்கு ஆதரவு
  • சசிகலா மற்றும் டிடிவி தினகரனை நேரில் சந்திப்பேன் - ஓ.பிஎஸ்
  • அதிமுகவில் அரங்கேறும் அடுத்தக்கட்ட குழப்பம்
சசிகலா, டிடிவி தினகரனை நானே நேரில் சந்திப்பேன் - ஓ.பி.எஸ் தடாலடி அறிவிப்பு title=

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அதிமுக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆதரவு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்த அவர், திடீரென அந்த அணியில் இருந்து விலகி, ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஓ, பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய, ஓ.பன்னீர் செல்வம், "அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ஏற்கனவே சொல்லிவிட்டேன். இரு தரப்பையும் இணைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விரைவில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

மேலும், பலர் தன் பக்கம் வர உள்ளார்கள் அது யார் என்பது பரம ரகசியம்" என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.  ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை முழுமையாக படித்த  பின்பு தான் கருத்து சொல்ல முடியும் என கூறிய அவர், கட்சியின் நலன் கருதி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பேன் என அதிரடியாக அறிவித்தார். பின்னர் பேசிய வைத்திலிங்கம், கட்சிக்கு உழைக்க வில்லை என்றால், ஓ.பன்னீர் செல்வத்தை, ஜெயலலிதா எப்படி முதலமைச்சராக்கினார்? என எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பினார். மேலும், ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை என்றால் எடப்பாடி  பழனிச்சாமி அரசியலில் அனாதையாகி விடுவார் என  வைத்திலிங்கம் காட்டமாக விமர்சித்தார்.

முன்னதாக பேசிய, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், "தனக்கு ஏற்பட்ட அவமானங்களை தாங்கி கொண்டு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்தவர் ஓ. பன்னீர் செல்வம்.  ஆகவே, அவருக்கு பின் நின்று, ராமருக்கு பாலம் கட்ட உதவிய அணில் போல் உதவியாக இருப்பேன்.மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் திமுகவை அகற்ற அதிமுக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தாளாளர் உட்பட 4 பேருக்கு ஐகோர்ட் ஜாமீன்

மேலும் படிக்க | 16 வயது சிறுமி பேசாததால் கழுத்தை அறுத்து ஒருதலை காதலன் வெறிச்செயல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News