`நான் ரெடி` என்னோடு வருவதற்கு அமைச்சர் ரெடியா? முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி

சென்னையில் பல்வேறு இடங்களில் நானே அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்திருக்கிறேன். அதனை காண்பிக்க நான் தயார் அமைச்சர் என்னோடு வருவதற்கு தயாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: அதிமுக கட்சிக்கு எந்த ஒரு சமந்தமும் இல்லாமல் அதிமுகவின் பொதுச்செயலாளர் என அறிக்கை அளித்து வரும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு அளித்து பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், சசிகலா திமுகவின் B-டீமாக இருந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசியது, "அதிமுகவுக்கு எந்த ஒரு சமந்தமும் இல்லாமல், அமைதியை சீரழிக்கும் வகையில் தொடர்ச்சியாக அதிமுகவின் பொதுச்செயலாளர் என அறிக்கை அளிப்பது, அதிமுக கொடியை பயன்படுத்துவது என தொடர்ச்சியாக சட்டத்திற்கு புறம்பாக சசிகலா செயல்பட்டு வருகிறார்.
இதுகுறித்து காவல் நிலையம் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம், ஆனால், இந்த புகார் மீது காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், சசிகலா மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் புகார் மனு அளித்து இருந்தோம். தற்போது அந்த புகார் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்ற 12 ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது என்றார்.
ALSO READ | தமிழகத்தில் ’மினி எமர்ஜென்சி’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், "சசிகலாவிற்கு திமுக ஆதரவு உள்ளது என்றும், அதனால்தான் காவல்துறை அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, சசிகலா திமுகவின் B டீமாக இருந்து கொள்ளலாம்: எனத் தெரிவித்தார்.
அம்மா மினி கிளினிக் பொருத்தவரை 1800 மருத்துவர்கள் நியமனம் செய்து இருந்தோம். பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக முதற்கட்ட சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் நானே அதனை திறந்து வைத்திருக்கிறேன். அதனை காண்பிக்க நான் தயார் அமைச்சர் என்னோடு வருவதற்கு தயாரா? என கேள்வி எழுப்பினார்.
ALSO READ | ஓ.பி.எஸ்-ன் குட்டிக்கதை சசிகலாவுக்கா? ஜெயக்குமார் விளக்கம்
உள்நோக்கத்தோடு இதனை திமுக செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர் , வாய்மை அரசாக இல்லாமல் வாய் அரசாக மட்டுமே இந்த அரசு உள்ளது, பொய்மை அரசாக செயல்படுகிறது என ஆளும் திமுக அரசு மீது குற்றம்சாட்டினார்.
அரசர்கள் மாறுவேடத்தில் செல்வதுபோல தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாறுவேடத்தில் நியாயவிலை கடைகளுக்கு சென்று பார்க்கவேண்டும் அங்கு பொதுமக்கள் அரசு குறித்து எப்படிப் பேசுகிறார்கள் என அவர் தெரிந்துக் கொள்ளவேண்டும் என அவர் கூறினார்.
அதேபோல பொங்கல் பரிசு பொறுத்தவரை தமிழகத்தில் இருக்கக்கூடிய நிறுவனங்களில் வாங்காமல் வடமாநிலங்களில் இருந்து பெறப்பட்டு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ALSO READ | அதிமுகவில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்த சசிகலா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR