சென்னை சேத்துப்பட்டில் அதிமுக சார்பில் ஏழைகளின் சிறிய சகோதரிகள் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கல்வி மற்றும் மருத்துவத்தை அறிமுகப்படுத்தியது கிறிஸ்துவர்கள் என புகழாரம் சூட்டினார்.
ALSO READ | முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் ரெய்டு
அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சியில் இருக்கும்போது கிறிஸ்துவர்களுக்கு செய்த நலதிட்டங்களை பட்டியலிட்டார். ஜெருசலேம் பயணத்தை தொடங்கி வைத்தது, அதற்கான பயணக் கட்டணத்தை குறைத்தது, மதம் மாறிய கிறிஸ்துவர்களுக்கு சலுகைகள் வழங்கியது ஆகியவற்றைக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து ஒரு குட்டிக்கதை ஒன்றை கூறிய அவர், மனம் திரும்பி வந்தவரை, மன்னித்து ஏற்க வேண்டும் என்பதே நல்ல தலைமைக்கு அழகு என உரையை முடித்தார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், சசிகலாவை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஓ.பி.எஸ் இந்தக் குட்டிக் கதையைக் கூறினாரா என கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு விளக்கமளித்த அவர், "சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது என்பதில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உறுதியாக இருக்கிறார்கள். சசிகலாவுக்காக, ஓ.பி.எஸ் அந்தக் குட்டிக்கதையை சொல்லவில்லை. பாமர்களுக்காக கூறிய கதையை சசிகலாவுக்கு பொருந்தாது" எனத் தெரிவித்தார். மேலும், அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்துக்கூறக்கூடாது எனத் தெரிவித்த அவர், சிறுபான்மையினர்களை பாதுகாக்கும் கட்சி அதிமுக, தண்டிக்கும் கட்சி திமுக என குற்றம்சாட்டினார்.
ALSO READ | எங்கே இருக்கிறார் ராஜேந்திராபாலாஜி? சகோதரி மகன் உள்ளிட்ட 3 பேர் கைது
நாடாளுமன்றத்தில் மீனவர் பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதாரம் சார்ந்த எந்தப் பிரச்சனைகளுக்கும் திமுக எம்.பிக்கள் குரல் கொடுப்பதில்லை எனத் தெரிவித்த ஜெயக்குமார், பழிவாங்கும் நோக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் வருமானவரிச் சோதனை நடத்தப்படுவதாக சாடினார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR