திண்டுக்கல் சீனிவாசன் வாக்குசேகரிப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் இன்னும் 2 தினங்களில் உள்ள நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியில் அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் முகமது முபாரக் இன்று சிறுகுடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


மேலும் படிக்க | தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க மோடி சதித்திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை


பாஜக அரசு மீது குற்றச்சாட்டு


அப்பொழுது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், இந்தியாவில் 10 ஆண்டுகள் ஆண்ட பாரதிய ஜனதா கட்சி நாட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் பெட்ரோல் டீசல், சமையல்,எரிவாயு ஆகியவற்றை விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்ந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இவற்றை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருவதாக கூறிய திண்டுக்கல் சீனிவாசன், இனிமேல் நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாது என்றும், அதற்காக வீட்டில் உள்ளவர்களுக்கு தங்கத்தின் பெயரில் தங்கராசு, தங்கம் என்று பெயர்தான் வைக்க முடியும் என்றும் கூறினார்.


தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாய்


மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் 1 பவுன் தங்கத்தின் விலை 1 லட்ச ரூபாயாக விலை உயர வாய்ப்புள்ளதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார். இவற்றை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசால் கட்டுப்படுத்த முடியாது என கூறிய திண்டுக்கல் சீனிவாசன், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தினந்தோறும் மக்களை காப்பாற்ற அதிமுக கூட்டணியான எஸ்.டி.பி.ஐ கட்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிடும் முகமது முபாரக் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கத்தால் இத்தகைய பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய அதிமுக பாடுபடும் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இந்த பிரச்சாரத்தில் அதிமுக மூத்த தலைவர் நத்தம் விஸ்வநாதன் பங்கேற்றார்


மேலும் படிக்க | கரெக்ட் ரூட்டில் செல்லும் கதிர் ஆனந்த்..! வேலூரில் மகுடம் சூடுவாரா? கள நிலவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ