தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க மோடி சதித்திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

Tamil Nadu Chief Minister M. K. Stalin, Modi Conspiracy against Tamilnadu: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க மோடி சதித்திட்டம் தீட்டியிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 16, 2024, 03:38 PM IST
  • தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க திட்டம்
  • பிரதமர் மோடியின் சதித்திட்டத்தை முறியக்க வேண்டும்
  • இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க மோடி சதித்திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை title=

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க பிரதமர் மோடி, பாஜக சதித்திட்டம் தீட்டியிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் நாடாளுமன்றத்தில் பறிக்கப்படுவதோடு மட்டும்மல்லாமல், நம் மாநிலத்தின் குரலுக்கு மதிப்பே இருக்காது என முதலமைச்சர் எச்சரிதுள்ளார். இதனால், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலேயே மக்கள் விரோத சட்டங்கள் நம் மாநிலத்தில் மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்தும் என்றும் கூறியுள்ள அவர், இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார். அதனால் பாஜகவுக்கு வாக்களிக்கக்கூடாது, தமிழ்நாட்டில் போட்டியிடும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | கரெக்ட் ரூட்டில் செல்லும் கதிர் ஆனந்த்..! வேலூரில் மகுடம் சூடுவாரா? கள நிலவரம்!

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், " பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.

மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?, சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக் குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும். வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம். பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க #Vote4INDIA!" என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு - உதயநிதி ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News