அதிமுகவில் முற்றும் அதிகார மோதல்: நீதிமன்ற செல்ல தயாராகும் ஓபிஸ்
கட்சி உட்பூசல் காரணமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
சென்னை: வருகிற செயற்குழு பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்தான தீர்மானத்தை இபிஎஸ் தரப்பு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் சீனியர் நிர்வாகி தம்பிதுரை ஓபிஎஸ் இடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது தம்பிதுரையிடம் கடந்த 3 ஆண்டுகளாக பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து இருப்பதாக பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இது ஒருபுறமிறக்க 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூடவிருக்கிறது. அந்தக் கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமை நாற்காலியில் அமரந்துவிடுவது என எடப்பாடி முடிவு செய்திருப்பதால் தற்போது ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.
தனது தம்பியை நீக்குவதற்கு கூட கையெழுத்திட்டு இருக்கின்றேன் என்னுடன் தர்ம யுத்தத்தின் போது உடன் இருந்த பல பேர் மீது நடவடிக்கை எடுத்த பொழுது கூட நான் கையெழுத்திட்டு இருக்கின்றேன் என்றும் வேதனை தெரிவித்தார் ஓபிஎஸ்.
மேலும் படிக்க | மோடியை கோர்த்துவிட்ட ஓபிஎஸ்... கடுப்பில் டெல்லி?
முன்னதாக, தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பெரம்பூர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, ரத்தக் காயத்துடன் வெளியே வந்த அவர், நீ இபிஎஸ் ஆதரவாளரானு கேட்டு அடிச்சாங்க என்று சொன்னது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
இன்னும் சில தினங்களில் பொதுக்குழு கூடவிருக்கும் சூழலில், ஒற்றைத் தலைமை பிரச்னை 23ஆம் தேதி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறிகளாக கடந்த சில மாதங்களாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட மோதல்கள் வெளிப்படுதுகின்றன.
ஆனால் தற்பொழுது தனது பதவியை கேள்விக்குறி ஆக்கக்கூடிய இந்த செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், இன்றோ நாளையோ சமாதானத்துக்கு வராத நிலையில் நடைபெற இருக்கின்ற பொதுக்குழு செயற்குழுவை தள்ளிவைக்க நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இந்த விஷயத்தைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்களும் அதிமுகவின் மூத்தத் தலைப்வர்களுமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வத்திடம் செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை சமரசம் பேசி வருகின்றனர்.
மேலும் படிக்க | எடப்பாடி ஆளானு கேட்டு அடிச்சாங்க... தாக்கப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர்
இந்நிலையில் ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றத்திற்கு சென்றால் அதை சந்திக்க தயாராகி எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பும் தயாராகி வருகின்றனர்.
இதுதொடர்பாக எடப்பாடியார் தரப்பில் இருந்து சட்டத்துறை சார்ந்த நபர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் எஸ் பி வேலுமணி தங்கமணி ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட சில நிர்வாகிகள் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க | அதிமுக இரு பிரிவினருக்கான சாதி கட்சியாகிவிட்டது - முன்னாள் எம்.எல்.ஏ வேதனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR