அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.  அதிமுகவின் பல சீனியர் முன்னாள் அமைச்சர்கள் பற்றி அந்த ஆடியோவில் பொன்னையன் பேசி இருந்தார்.  இது அதிமுகவினர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.  சமீபத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மேலும் அதே மேடையில் கட்சிக்கு துரோகம் விளைத்ததற்காக பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.  இந்த பிரச்சனை ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்க மறுபுறம் தற்போது ஆடியோ விவகாரம் சூடுபிடித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தொடரும் திமுக Vs ஆளுநர்... சந்தேகப்படும் அமைச்சர்


இந்நிலையில் பொன்னையன் சென்னை அண்ணா நகரில் உள்ள  இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.  "அந்த ஆடியோவை நானும் கேட்டேன், அது 100% பொய்மை நிறைந்தது. வாய்ஸ் மாடுலேஷன் டெக்னாலஜி உலகத்தையே ஆட்டிப்படைப்பது மிமிக்கிரி பயன்படுத்தி எனக்கு களங்கம் உருவாக்க என் மூலமாக எடப்பாடி தலைமையேற்றுள்ள அதிமுகவை களங்கம் பிறப்பிக்க திட்டமிட்டு பொய்யாக வெளியிடப்பட்டுள்ள பொய் செய்தி.  என்னுடைய குரலும் அல்ல என்னுடைய கண்டன்டும் அது அல்ல.  வாங்க போங்க என்ற பண்பை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய நபர் நான்,  கொச்சையாக அருவருக்கத்தக்க வார்த்தையில் திட்டுவது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும், இது அப்பட்டமான பொய். 


 



இந்த ஆடியோவை வெளியிட்டவர்களுக்கு கட்டாயம் காலம் பதில் சொல்லும்.  ஓபிஎஸ், இபிஎஸ் ஐ ஒன்று சேர்த்த பணியில் பிரதான பங்கு நான் வகுத்திருக்கிறேன்.  என்னை தாக்குவதற்கு காரணம் என் மூலமாக செய்தி வெளியே வந்தால் மக்கள், தொண்டர்கள் நம்புவார்கள் என்று இயக்கத்திற்கு எதிரான எதிரி இத்தகைய சூழ்ச்சியை செய்திருக்கிறார்கள்.  திமுகவிற்கு ஆதரவாக பேசியதால்தான், அவர் மகன் மீதான குற்றச்சாட்டு தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.  எடப்பாடி தலைமையில் செயல்படக்கூடிய அதிமுகவில் உள்புசல் ஏற்பட வேண்டும், எடப்பாடி அவர்களின் செல்வாக்கு குறைய வேண்டும் என்று யார் எதிர்பார்த்தார்? நிச்சயம் இதனை ஓபிஎஸ் தான் செய்திருப்பார்கள்.  யார் என்று துல்லியமாக கண்டறிவதற்கு முன்பு இவர்கள் தானா என்று எப்படி சொல்ல முடியும்.


சி.வி சண்முகம் மிகவும் திறமைசாலி அவர் திறமைக்கு கொடுத்த பரிசு மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவி,  எனக்கு வாய்ப்பு மறுக்கப்படவில்லை. திறமைசாலி டெல்லியில் வழக்குகளை சந்திக்க கூடிய நபர் இளமை திறமையானவர் எதன் அடிப்படையில் தான் அவருக்கு வழங்கப்பட்டது.  எடப்பாடி பழனிச்சாமி கீழே இருக்கும் எம்எல்ஏக்கள் சிவி சண்முகத்திற்கும் உட்பட்டு இருக்கிறார்கள்.  எடப்பாடி தனக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று எங்கும் எதற்கும் கேட்டதில்லை, பொதுக்குழு உறுப்பினர்களால் கொடுக்கப்பட்டது.  எடப்பாடிக்கு மனக்கசப்பு இல்லை, ஓபிஎஸ்ஐ பொறுத்தவரை இரட்டை தலைமை வேண்டும் என்றே சொல்லிவிட்டார்" என்று விளக்கம் அளித்துள்ளார்.


 



மேலும் படிக்க | அதிமுக வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை கூடாது: வங்கிக்கு ஓபிஸ் கடிதம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR