TN COVID Update: தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 26465 பேர் பாதிப்பு, 197 பேர் பலி
சென்னையில் மட்டும் நேற்று 6,738 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் சென்னையில் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,77,042 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகமானோர் இறந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 26,465 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது, இதுவரையிலான அதிகபட்ச ஒற்றை நாள் தொற்று எண்ணிக்கையாகும். இதனுடன் தமிழகத்தில் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 197 பேர் இறந்த நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு செய்திக்குறிப்பின் படி, நேற்று 22,381 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,73,439 ஆக உயர்ந்துள்ளது. 1,35,355 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் நேற்று 6,738 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் சென்னையில் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,77,042 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகமானோர் இறந்துள்ளனர். இங்கு கொரோனா (Coronavirus) காரணமாக உயிர் இழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,081 ஆகும்.
இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,52,812 ஆகும். இது இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 2,36,98,799 ஆக உயர்த்தியுள்ளது.
ALSO READ: தடுப்பூசி போடும் பணிக்கு இடையூறாகும் வகையில் லாக்டவுன் இருக்கக் கூடாது: PM Modi
சென்னையைத் (Chennai) தவிர, செங்கல்பேட்டில் 2,154, கோயம்புத்தூரில் 2,101 திருவள்ளூரில் 1,384, மதுரையில் 1,051 பேரும் நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும், 30 மாவட்டங்கள் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களில் உள்ளது.
கடலூரில் 462, தர்மபுரியில் 243, திண்டுக்கல்லில் 323, ஈரோடில் 639, கள்ளக்குறிச்சியில் 202, காஞ்சீபுரத்தில் 857, கன்னியாகுமரியில் 435, கரூரில் 265, கிருஷ்ணகிரியில் 500, நாகப்பட்டினத்தில் 365, நாமக்கல்லில் 357, நீலகிரியில் 168, புதுக்கோட்டையில் 164, ராமநாதபுரத்தில் 228, ராணிப்பேட்டையில் 459 மற்றும் சேலத்தில் 648 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
சிவகங்கையில் 113, தென்காசியில் 322, தஞ்சாவூரில் 331, தேனியில் 495, திருபத்தூரில் 272, திருவண்ணாமலையில் 415, திருவாரூரில் 331, தூத்துக்குடியில் 855, திருநெல்வேலியில் 673, திருப்பூரில் 552, திருச்சிராப்பள்ளியில் 784, வேலூரில் 582, விழுப்புரத்தில் 521, விருதுநகரில் 273 பேர் பாதிக்கப்பட்டதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றின் காரணமாக நேற்று உயிர் பிறிந்த 197 பேரில், 47 பேருக்கு வேறு என்த உடல்நலப் பிரச்சனைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு 17 வயது சிறுவனும் அடங்குவார். கொரோனா தொற்று காரணமாக அவருக்கு கடுமையான சுவாசக் கோளாறு ஏற்பட்டது.
நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 20 பேர் பல்வேறு இடங்களிலிருந்து தமிழகம் திரும்பி வந்தவர்கள்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்திற்கு சமீபத்தில் COVID-19 சோதனை (COVID Testing) நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் இயங்கும் ஒட்டுமொத்த ஆய்வகங்களின் எண்னிக்கை 267 ஆக உயர்ந்துள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR