கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 7, 2021, 02:04 PM IST
கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்! title=

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுகவுக்கு மட்டும் 125 இடங்கள் கிடைத்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் மொத்தமாக உள்ளனர்.

இதற்கிடையில் தமிழக முதல் அமைச்சராக திமுக (DMK) தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று பதவி ஏற்றார். அவரை தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஒவ்வொருவரும் உறுதிமொழியை வாசித்து அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்றைய பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அத்துடன் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார் ஆளுநர்.

ALSO READ | தனது ட்விட்டர் பக்கத்தில் 'Chief Minister of Tamil Nadu' என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

முதல் அமைச்சராக பதவியேற்ற பின்பு பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய மு.க ஸ்டாலின் தலைமைச்செயலகம் வருகை தந்தார். முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கினார். 5 முக்கிய கோப்புகளில் முதல் அமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். அவை.,

 

 

1.ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் இம்மாதமே வழங்கப்படும். 2.07 கோடி அரிசி அட்டைதாரர்கள் இதனால் பலன் பெறுவார்கள்.
2. நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக  பயணிக்கலாம்.
3. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. இந்த வூதியா கட்டணம் மே 16 முதல் அமலுக்கு வருகிறது.
4.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் காப்பீடு.
5. உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற புதிய துறை உருவாக்க உத்தரவு. இதில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் 100 நாட்களில் தீர்வு காண உத்தரவு.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News