திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலை, விஷமங்கலம் அருகே உள்ள நாகராஜன்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. ஆனால் அது அரசு மதுபான கடை தான் என்பதற்கு அங்கு போர்டு எதுவும் இல்லை. இருந்தாலும் கூட அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் தினம் தோறும் கூலி வேலை செய்யும் மக்கள், படிக்காத பாமர மக்கள் குடிப்பதற்காக மதுபான பாட்டில்களை அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 10 முதல் 25 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்து வருகின்றனர். அது ஒருபக்கம் இருக்கும் நிலையில் அந்த மதுபான கடையில் காலாவதியான மது பாட்டில்களை அதிகபட்ச விலையான 200 ரூபாய்க்கு மேல் 225 ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வெற்றிகரமான தோல்வி... சக்ஸஸ் ஆன தமிழக பாஜகவின் வியூகம் - அண்ணாமலையின் திட்டம் இதுதான்!


இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மது பாட்டில்களை வாங்கி காலாவதி ஆகி உள்ளது என்று கேட்டபோது அதுக்கு என்ன அதே குடி போ என்று திமிர்த்தனமாக பதில் அளித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்று செய்தி எடுத்து கொண்டு இருந்த போது உள்ளே இருந்து வெளியே வந்த விற்பனையாளர் கோவிந்தராஜ் என்பவர் செய்தி சேகரித்து கொண்டு இருந்த செய்தியாளரிடம் நீங்க மட்டும் தான் வீடியோ எடுபீங்களா நானும் எடுப்பேன் என்று செய்தியாளரை புகை படம் எடுத்து அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார் என்றே சொல்லாமல் சென்று விட்டார். 


இது போன்று அந்த கடையில் கூடுதல் விற்பனை, காலாவதியான மது பாட்டில்கள் விற்பனை படுஜோர் என்று கூறப்படுகிறது. அது குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினால் அதில் பணியாற்றும் நபர்கள் மிரட்டல் விடுவதால் அங்கு யாரும் கேள்வி கேட்பதில்லை என்று கூறப்படுகிறது. எனவே இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


மேலும் படிக்க | சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டார்: எஸ்.வி.சேகர் ஜீ தமிழ் நியூஸுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ