சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டார்: எஸ்.வி.சேகர் ஜீ தமிழ் நியூஸுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மு.கஅழகிரியின் மகன் துரை தயாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின் ஜீ தமிழ் நியூஸ் செய்திக்கு எஸ்.வி சேகர் பிரத்யேக பேட்டி

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 5, 2024, 04:43 PM IST
  • யாரை எதிர்த்து ஜெயித்தாரோ அவர்களாலே அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
  • அதிமுகவிற்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர்.
  • தோல்வியை சரி செய்து வெற்றியாக எப்படி மாற்ற வேண்டும் என்பதை தான் யோசிக்க வேண்டும்.
சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டார்: எஸ்.வி.சேகர் ஜீ தமிழ் நியூஸுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி title=

முன்னாள் மத்திய அமைச்சரும் மு.க.ஸ்டாலினின் சகோதருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக் குறைவு காரணமாக உயர் ரக மருத்துவச் சிகிச்சை மற்றும் பிசியோதெரப்பிக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் கடந்த 14.03.2024 முதல் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான எஸ்.வி சேகர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது உடன் செய்தியாளர் முக்தார் இருந்தார்.

அதற்குப் பின் எஸ்.வி.சேகர் ஜீ தமிழ் நியூஸ் செய்திகளுக்கு பிரத்தியேகமாக பேட்டியளித்தார். அவரது பாணியில் அவர் பல விஷயங்களை பற்றி வெளிப்படையாக பேசினார். 

சந்திரபாபு நாயுடு NDA கூட்டணி பக்கம்தான் என திட்டவட்டமாக அறிவித்தது குறித்து எமது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘தமிழக அரசியல் பற்றி தான் நான் ஓரளவுக்கு தெரிந்து வைத்துள்ளேன். ஆனால் சந்திரபாபு நாயுடு யாரை எதிர்த்து ஜெயித்தாரோ அவர்களாலே அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆகையால் அவர் இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டார். ஆகையால் அவரது ஆதரவு NDA கூட்டணிக்கு என கூறிவிட்டார். என்ன இருந்தாலும் புல் மெஜாரிட்டி இல்லாத போது பல கட்சிகளுடைய பல நிர்பந்தங்கள் ஏற்ப தான் ஆட்சி நடத்தக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஜகவின் முகமே மோடி அவர்கள் தான்

ஆனால் அதை எல்லாம் தாண்டி இன்று பாஜகவின் முகமே மோடி அவர்கள் தான். ஆனால் அவர் எல்லாவற்றையும் சமாளித்து மூன்றாவது முறை பிரதமராகப் போகிறார். நான் அவர் முதல் முறை பிரதமர் ஆகும்போதே நீங்கள் மூன்று முறை பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு என கூறிவிட்டேன். அவர் இப்போது, ஜெயித்து காட்டுவார். அதற்காக நான் பிரார்த்திக்கிறேன்.’ என கூறினார்.

நான் ஏழாவது பாஸ் அண்ணே, நீங்க எஸ்எஸ்எல்சி பெயில் அண்ணே

நேற்று நடைபெற்ற முடிந்த வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவு படி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பாஜக 2-ஆம் இடத்தில் வந்துள்ளது. ஆனால் பாஜகவால் தமிழகத்தில் இன்னும் கால்பதிக்க முடியவில்லையே என எமது செய்தியாளர் கேட்டதற்கு, ‘இரண்டாவது இடத்தில் உள்ளது என்றால் எத்தனை இடங்களில் வென்றது என கூறுங்கள். நான் ஏழாவது பாஸ் அண்ணே, நீங்க எஸ்எஸ்எல்சி பெயில் அண்ணே... அதே நிலை தான் ஒரு ஓட்டில் தோற்றாலும் ஐந்து வருடமும் தோல்விதான்.

மேலும் படிக்க | 'கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி...' நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?

அவர்களுக்கே இல்லாத கவலை எதுக்கு நாம் கவலை பட வேண்டும்? 

இந்த ஐந்து வருடத்தில்  தோல்வியை சரி செய்து நீங்கள் கொண்டு வர வேண்டும். அடிப்படையாக தமிழக பாஜகவில் பூத் அளவிற்கு வேலை செய்ய ஆள் இல்லை. அதிமுக-வில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்தாலும், அவருடைய கட்டமைப்பு சரியாக இல்லை. அவர்களுக்குள் உட்கட்சிக்குள் சில குழப்பங்கள் இருந்தாலும் அதிமுக பிளவுப்பட்டு இருந்தாலும் கூட இது இந்த தேர்தலுக்கு பிறகு ஓபிஎஸ் இபிஎஸ் இணையலாம். அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து தங்களை பலப்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கே இல்லாத கவலை எதுக்கு நாம் கவலை பட வேண்டும்? அவசிமே இல்லை.

சட்டமன்றத்தில் ஒரே ஒரு எம்எல்ஏ மட்டும் இருந்த கட்சி மீண்டும் சட்டமன்றத்தில் முழு பெரும்பான்மையுடன் சட்டமன்றத்தில் அமர்ந்த கதை நமக்கு தெரியாதா? ஆகையால் தோல்வியை நாம் எப்படி எதிர்கொண்டு அதை பரிசீலனை செய்கிறோம் என்பது முக்கியம். அதை வெற்றியாக மாற்ற வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் இதிலிருந்து மீண்டு திரும்ப வாய்ப்பே கிடையாது’ என கூறினார்.

மேலும் படிக்க | Chennai Rains : சென்னையில் வெளுத்துக்கட்டும் மழை! எப்போது வரை நீடிக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News