நீலகிரி மாவட்டத்தில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், உதகை குன்னூர் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கும். ஆனால் நடப்பு ஆண்டில் பருவ மழை தாமதமாக ஜூலை மாதத்தில் தொடங்கினாலும் சரியாக பெய்யாமல் விட்டு விட்டு சாரல் மழையாக பெய்து வந்தது. இதனால் நீர் நீலைகளில் நீர் மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பருவ மழையின் தாக்கம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, முக்குருத்தி  பகுதிகளிலும், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளாலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி பகுதியில் 38 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து அப்பர் பவானியில் 10 செ.மீ, தேவாலாவில் 9.3 செ.மீ, சேரங் கோடு 9.1 செ.மீ, பந்தலூர் 7.8 செ.மீ, ஓவேலியில் 6.8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் தமிழ்நாடு முதலிடம் - நாடாளுமன்றத்தில் கூறிய நிர்மலா சீதாராமன்


ஒரு சில பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு மரங்கள் விழுந்தன, குறிப்பாக பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரி அருகே கட்டப்பட்டு பகுதியில் வீடு கட்டுவதற்காக அஸ்திவார குழி எடுத்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மேலிருந்து மண்  சரிவு ஏற்பட்டது, இதில் இருவர் குப்புசாமி (35) யுவராஜ் (40) ஆகிய இருவரும் சிக்கி போராடி கொண்டிருந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மண்ணில் புதைந்த இருவரை மீட்டனர் மீட்கப்பட்ட இருவர் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் தொடர் மழை பெய்து வருவதால் உயரமான சுவர்கள் மற்றும் மரங்கள் மண் திட்டுகள் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் நிற்க வேண்டாம் எனவும் வாகனங்கள் நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் தமிழகத்தில் சில தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக சேலம் கோவை திருப்பூர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.  இந்த நிலையில் சேலத்தில் காலை முதலே ஒரு சில பகுதிகளில் லேசான தூறலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, இந்த நிலையில் நேற்று மாலை முதல் அஸ்தம்பட்டி ஏற்காடு அடிவாரம் அம்மாபேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த இடைவிடாத பெய்த மழையின் காரணமாக சேலம் நான்கு ரோடு அருகே உள்ள பெரமனூர் பிரதான சாலையில் 55 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத மரம் வேருடன் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் என போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் ராட்சத மரம் என்பதால் மரம் அறுக்கும் தொழிலாளிகள் 40க்கும் மேற்பட்டோர் இந்த மரத்தை பகுதி பகுதிகளாக வெட்டி எடுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர் இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது இந்த ராட்சத மரம் விழுகின்ற பொழுது நல்வாய்ப்பாக வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


மேலும் படிக்க | வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரவுடி வெட்டிப்படுகொலை! திண்டுக்கலில் தொடரும் கொலைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ