இனி அனைத்திற்கும் கிளாம்பாக்கம்தான்... ஆம்னி முதல் SETC வரை - முழு விவரம்!
Kilambakkam Bus Stand: ஓரிரு ஆம்னி பேருந்து சங்கத்தை சார்ந்த உரிமையாளர்கள் போதிய வசதி இல்லை என செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கத்தில் இருந்து நேற்று (ஜன. 24) முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து எங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்ட நிலையில் தேவைபடும் வசதிகளை குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கேட்டறிந்தார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 440 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் தற்பொழுது 333 ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடைய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். zeenews.india.com/tamil/tamil-nadu/ombi-buses-from-starts-from-koyambedu-or-kilambakkam-know-the-details-484771
மேலும் பேசிய அவர்,"நேற்று முதல் நாள் என்பதால் சில சங்கடங்கள் ஏற்பட்டது. அவை வெகு விரைவில் சரி செய்யப்படும். தென் மாவட்டங்களில் இருந்து வந்த சில ஆம்னி பேருந்துகள் நெடுஞ்சாலையில் பயணிகள் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். பெரும்பாலான பேருந்துகள் உள்ளே வந்தன. இனி இதுபோன்ற செயல்கள் நடைபெறாது" எனவும் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | 3 வயது குழந்தை உயிரிழப்பு... வைரஸ் காய்ச்சல் காரணமா? - அமைச்சர் மா.சு பதில்
மேலும், "ஆம்னி பேருந்துகள் இனி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லக்கூடாது. ஆம்னி பேருந்துகளின் சேவையானது இனி கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்" என திட்டவட்டமாக தெரிவித்தார்.
முதற்கட்டமாக ஆம்னி பேருந்துகளுக்கான புக்கிங் கவுண்டர்கள் அமைக்க 25 கவுண்டர்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையில்லாத பேட்டி கொடுப்பதை தவிர்த்து விட்டு பேருந்துகள் இயக்க வேண்டும், இல்லையெனில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கு வசதிக்கு ஏற்ப கூடுதலாக 200 நடை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தாம்பரத்தில் இருந்து பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கோயம்பேட்டில் பேருந்து இயக்கப்படுகின்றது. கிண்டிக்கு மூன்று நிமிடத்திலும் அதே போன்று தாம்பரம் கிளாம்பாக்கம் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை வடிவில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்களின் தேவையறிந்து அதனை சரி செய்யும் நிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார். வரும் மார்ச் மாதத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக தயாராகும் என அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, மெட்ரோ, மின்சார ரயில், தொடர்ச்சியான பேருந்து ஆகிய போக்குவரத்து வசதிகள் பயணிகள் ஏற்படுத்தி தரும்போது ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் அதுவரை கோயம்பேட்டில் இருந்தே இயங்கும் எனவும் தெரிவித்திருந்தது. தொடர்ந்து, அரசு தனது முடிவில் உறுதியாக நின்ற நிலையில், அனைத்து ஆம்னி பேருந்து சேவைகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து சேவையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வாக்குகள் குறைந்தால் நடவடிக்கை… வெற்றி ஒன்றே திமுகவின் இலக்கு - உதயநிதி ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ