சென்னை: கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு மிகப்பெரிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த செய்தி என்னவென்றால், கல்லூரியில் இறுதிப்பருவத்தை (Semester Exam) தவிர மற்ற பருவத்தில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியர்ஸ் மாணவர்கள் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தாலே பாஸ் ஆனதாக தமிழக அரசு (TN Govt) அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தினால் உரிய நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை


தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி. அன்பழகன் (K. P. Anbalagan) இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்வி கட்டணம் உயர்வு இல்லை. தேர்வுக்கான கட்டணம் செலுத்திவிட்டு தேர்வுக்காக காத்திருந்த அனைவரும் தேர்ச்சி. மேலும் இது தொலைதூர கல்வியில் பயின்று வந்த மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் கூறினார்.