கலியுகத்துக் கர்ணன்: பிச்சையெடுத்து நன்கொடை அளிக்கும் மதுரை பூல்பாண்டியன்!!
கொரோனா காலம் பல வித வினோதங்களை நமக்குக் காட்டுகிறது. பல எளிய மனிதர்களின் உயரிய நோக்கங்களை நாம் தினமும் கண்டு வருகிறோம்.
மதுரை: கொரோனா காலம் பல வித வினோதங்களை நமக்குக் காட்டுகிறது. பல எளிய மனிதர்களின் உயரிய நோக்கங்களை நாம் தினமும் கண்டு வருகிறோம். அப்படிபட்ட ஒரு அரிய மனிதர் பற்றி மதுரையிலிருந்து தெரிய வந்துள்ளது.
மதுரையில் (Madurai) தன் தினசரி உணவுக்கே பிச்சை எடுக்கும் ஒரு பிச்சைக்காரர் செவ்வாய்க்கிழமை மாநில கோவிட் -19 நிவாரண நிதிக்கு 90,000 ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். மதுரையில் பிச்சை எடுத்து பிழப்பு நடத்தும் பூல்பாண்டியன் (Poolpandian) என்ற இந்த நபர், COVID-19 நிவாரண நிதிக்காக 90,000 ரூபாய் நன்கொடை அளித்தார்.
"மாவட்ட ஆட்சியர் எனக்கு சமூக சேவகர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளார். அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்று அவர் கூறினார்.
பூல்பாண்டியன் மே மாதத்திலும் இதே காரணத்திற்காக 10,000 ரூபாய் நன்கொடை அளித்திருந்தார்.
"நான் இந்த பணத்தை குழந்தைகளின் கல்விக்காக வழங்குவதாக இருந்தேன். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பிரச்சினை பெரியதாக இருப்பதால் எனது பணத்தை நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளேன்" என்று அவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.
பூல்பாண்டியனின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
தற்போது, தமிழகத்தில் 54,122 பேர் கொரோனா சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. COVID-19 இலிருந்து 2,83,937 பேர் குணமடைந்துள்ள நிலையில், இந்த கொடிய வைரஸ் 5,886 பேரின் உயிரைக் கொன்றுள்ளது.
ஜூன் மாதத்தில், உத்தரபிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது உண்டியலை உடைத்து ஜார்க்கண்டிலிருந்து மூன்று தொழிலாளர்களின் விமான டிக்கெட்டுக்கு ரூ .48,000 அளித்தார். ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சிறுமியின் கருணையையும் மற்றவர்களின் தேவைகளுக்கு அவர் காட்டிய பரிவையும் பாராட்டினார்.
மற்றொரு சம்பவத்தில், ரிஷிகேஷைச் சேர்ந்த 11 வயது சிறுமி, தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்க தனது உண்டியலில் இருந்த பணத்தை வழங்கினார். "அங்கிள், அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் அதை உடைத்து பணத்தை பசியுள்ள மக்களுக்கும் விலங்குகளுக்கும் உணவளிக்க பயன்படுத்தலாம்" என்று ஆலியா சாவ்லா போலீசாரிடம் தெரிவித்திருந்தார். சிறுமியின் உண்டியலில் 10,141 ரூபாய் இருந்தது.
ALSO READ: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்: காரில் உலா வந்த கர்ணப் பிரபு!!
லக்னோவில் உள்ள சர்பாக் ரயில் நிலையத்தில் கூலி வேலை செய்யும் 80 வயது நபர் தனது சேவைகளை புலம்பெயர்ந்தோருக்கு இலவசமாக வழங்கி வருகிறார். அரசாங்கம் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை ஆரம்பித்ததிலிருந்து, முஜிபுல்லா ரஹ்மான் புலம்பெயர்ந்தோருக்கு தனது உதவியை வழங்குகிறார், ஆனால் அவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதில்லை.
உண்மையிலேயே கொரோனா காலம் நமக்கு மனிதர்களின் மறு பக்கத்தைக் காட்டி வருகிறது. மற்றவர்களுகு உதவ மனம் இருந்தால் போதும் என்பதை இந்தக் காலம் நமக்கு ஆணித்தரமாக உணர்த்தி விட்டது.
ALSO READ: காவியக் காதல்: உண்மை காதலுக்கு மரணமில்லை என்பதை நிரூபித்த கர்நாடகா வர்த்தகர்..!!!