Pithru Darppan on Aadi Amavasya: முன்னோர்களுக்கான கடமையாக கருதப்படும் அமாவசை தர்ப்பணம் தமிழகம் முழுவதும் அடாத மழைக்கு நடுவிலும் விடாது நடைபெற்று வருகிறது. ஆடி அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் திதி கொடுக்க கொட்டும் மழையிலும் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி சிரத்தையுடன் மத சடங்குகளை செய்து வருகின்றனர். திருநெல்வேலி தாமிரபரணி ஆறு, ஈரோடு பவானி கூடுதுறை உட்பட நாடு முழுவதும் ஆடி அமாவாசையை முன்னிட்டு திதி,தர்ப்பணம் உள்ளிட்ட பரிகாரம் செய்ய ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியுள்ளனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முக்கூடல்களில் அதாவது மூன்று நதிகள் அல்லது மூன்று கடல்கள் கூடும் இடங்களில் அமாவாசை தினத்தன்று நீராடி, தர்ப்பணம் செய்வது முன்னோர்களின் ஆசி என்ற அருளைப் பெற்றுத் தரும்.



தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் ஈரோடு மாவட்டம் பவானி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் கொட்டும் மழைக்கு நடுவிலும் மக்கள் கூடி பித்ரு தர்ப்பணங்களை செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | அக்னி நீராடிய கடலில் அமாவாசை நாளன்று நீராடுவோரின் பாவங்கள் தீரும்


தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவும், திருமணம் தடை, தோஷம் உள்ளிட்ட பல்வேறு பரிகாரங்கள் செய்வதற்காக அமாவாசை உள்ளிட்ட தினங்களில் கூடுதுறையில் பரிகார பூஜைகள் செய்து தர்ப்பணம் செய்கின்றனர்.


ஆடி அமாவாசை நாளான இன்று நாமக்கல் சேலம் கோவை திருப்பூர் தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டும் இன்றி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பவானி கூடுதுறைக்கு வந்து மத சடங்குகளை செய்துக் கொண்டிருக்கின்றனர்.


தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் ஆறுகளில் அதிகப்படியான நீர் சென்று கொண்டிருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | முக்கண்ணனுக்கு ஆடி மாத காவடி: இது சிவனுக்கான காவடியாட்டம்


மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திதி தர்ப்பணம் உள்ளிட்டவை கொடுப்பதற்காக தடை செய்யப்பட்ட நிலையில் ஆற்றங்கரைகளில் இந்த ஆண்டு 10,000 மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். 


ஆடி அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் திதி கொடுக்க கொட்டும் மழையிலும்  குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அமாவாசை நாட்களில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தகர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவருடைய பாவங்கள் நீங்கி மோட்சம் கிட்டும் என்ற ஒரு ஐதீகம் உள்ளது.


ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குள்  உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி விட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து  சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர்.ஆடி அமாவாசை ஒட்டி திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும் 


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, நிம்மதியான வாழ்வைத் தரும் பிரதோஷ வழிபாடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ