சென்னை: இன்று (சனிக்கிழமை) காலை, சி.எம்.ரவி, எல் முருகன் மற்றும் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் திமுக எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜக கட்சியில் இணைந்தார். மு.க. அழகிரியுடன் எனக்கு இன்னும் நல்ல உறவு இருக்கிறது. நான் அவரை பாஜகவுக்கு அழைத்து வருவேன். அவர் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கே.பி.ராமலிங்கம் கட்சியில் சேர்ந்த பிறகு தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவர் எல் முருகனிடம் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் சகோதரர் மு.க. அழகிரி (MK Stalin’s brother MK Alagiri) தனது சொந்த அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் பாஜகவுடன் கைகோர்க்கக்கூடும் என்றும் யூகங்கள் பரவி வருகின்றன.


திமுக-விலிருந்து விலக்கப்பட்டு, நீண்ட நாட்களாக அரசியல் ஈடுபடாமல் இருக்கும் எம்.கே. அழகிரி குறித்து கடந்த இரண்டு நாட்களாக பல ஊகங்களும் வதந்திகளும் பரவி வருகின்றன. அதுக்குறித்து அவர் தரப்பில் இருந்து இன்னும் எந்தவித தகவலும் வெளியாகவில்லை. ஆனால் தனது பேஸ்புக் பக்கத்தில், திரும்ப வந்துட்டேனு சொல்லு" என்ற ஹேஸ்டேக்கை பகிர்ந்துள்ளார்.


ALSO READ | பாஜக-வுடன் கை கோர்க்கப்போகிறாரா அழகிரி? சூடி பிடிக்கும் தேர்தல் களம்!!


முன்னதாக, தனது இளைய சகோதரரான ஸ்டாலினுடன் அழகிரிக்கு (MK Azhagiri) கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, அவர் திமுக கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். தற்போது பா.ஜ.க-வில் சேர அழகிரி ஆர்வம் காட்டுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதற்கிடையில், திமுக மற்றும் அதிமுகவின் வாக்குப்பங்கைப் பிரிக்க உதவும் என்ற வகையில் ரஜினிகாந்தை அரசியலில் இழுக்கவும்,  அது பாஜகவுக்கு சாதகமாக இருக்கு வேண்டும் என்ற அடிப்படையில் பேசுவதற்காக பாஜக தயாராகி வருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழகத்தில் முக்கிய செல்வாக்குமிக்கவர்களில் ஒருவரான நடிகர் ரஜினிகாந்த் (RajiniKanth) அரசியலில் இருந்து விலகி இருப்பதற்கான தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் வயது, உடல்நிலை கருத்தில் கொண்டு ரஜினி அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பின்னரும், பாஜக மீண்டும் ரஜினியை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது.


ALSO READ |  அமித்ஷாவின் தமிழக வருகையும் பல அரசியல் கணக்குகளும்..!!


பல பிரபலங்களையும் மற்ற கட்சிகளின் முக்கிய அரசியல்வாதிகளையும் தங்கள் கட்சிக்கு இழுக்க பாஜக முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR