இந்தியாவிலேயே சிறந்த நல்லாட்சி செய்யும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தமிழக அரசுக்கு இப்பட்டியலில் முதலிடம் அளித்திருப்பது 2019-ஆம் ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., 


"நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமாம்...
இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு நம்மிடம் இருந்து விடைபெறுகிறது 2019..!" என குறிப்பிட்டுள்ளார்.



மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ‘தேசத்தில் சிறந்த நல்லாட்சி செய்வதற்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு இதற்காக மத்திய அரசு 5.62 புள்ளிகளையும் அளித்து கௌரவித்துள்ளது. 


தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி மத்திய நிர்வாகம் சீர்திருத்த மற்றும் பொதுமக்களின் குறைதீர்க்கும் துறை ஒரு பட்டியலை தயார் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை வைத்து எந்த மாநிலம் சிறப்பாக செயல்பட்டுகிறது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அதன்படி குறிப்பிட்ட 17 அரசு துறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்கள் கொண்டு பட்டியல் தயார் செய்து, தமிழகத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. 
உள்கட்டமைப்பு, சுகாதாரம், நிதி நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டு தமிழகத்திற்கு இந்த அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் திமுக, அமமுக முதலிய கட்சிகள் மக்கள் ஆட்சிக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுப்படும் அதிமுக அரசுக்கு இந்த மதிப்பு அளித்திருப்பது வேதனைக்குறியது என வருத்தம் தெரிவித்துள்ளனர்.