Minister Anbil Mahesh Press Meet: பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர் குடும்பத்துக்கு அரசு என்றும் துணை நிற்கும் எனவும் உறுதி அளித்தார். அதுக்குறித்து பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசிரியர் கொலை சம்பவம் -மக்கள் பதற்றம்


தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது வகுப்பறைக்குள் நுழைந்த தற்காலிக ஆசிரியரின் கழுத்துப் பகுதியில் கத்தியால் மதன் என்பவர் குத்தியதால், அங்கேயே நிலைகுலைந்து சரிந்த ஆசிரியரை, மாணவர்கள் மற்றும் மற்ற ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இருப்பினும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கொலையாளி மதன் வாக்குமூலம்


ஆசிரியரை கொலை செய்த மதனை காவல் துறையினர் கைது செய்து, விசாரணையை மேற்கொண்டதில், "தன்னை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் ஆசிரியர் ரமணியை குத்திக் கொலை செய்ததாக மதன் வாக்குமூலம் அளித்து உள்ளார். 


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும் சம்பவம் நடந்தது குறித்து கேட்டறிந்ததுடன், உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். மேலும், இந்த சம்பவத்தை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி


இந்த விவகாரம் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், "ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொலையை நேரில் பார்த்ததால் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் பயந்து விடக்கூடாது. ஆசிரியை கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மற்றும் அவரது குடும்பத்துக்கு அரசு என்றும் துணை நிற்கும் என்று கூறினார். 


மேலும் தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தில் "ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இன்று மாலை கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் செல்ல உள்ளேன் என்றார். இந்த கொலை சம்பவம் குறித்து என்ன நடந்தது என்பதை தெரிந்துக்கொண்டு பின்னர் முழுமையான விளக்கம் அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.


மேலும் படிக்க - தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக் கொலை! கொலையாளி கைது


மேலும் படிக்க - கடத்தல்... மிரட்டல்... ஸ்கெட்ச் போட்ட போலீஸ் - ராணிப்பேட்டையில் திக் திக்


மேலும் படிக்க - என் பேக்கில் ஆசிட் வைத்திருக்கிறேன் - கன்னியாகுமரி பெண் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ