பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் நடந்தது. இந்த பொதுக்குழுவுக்கு ஜி.கெ.எ மணி தலைமை தாங்க, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக தலைவராக பணியாற்றிய ஜி.கே. மணிக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்தச் சூழலில் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்புமணி ராமதாஸுக்கு தலைவர் பதவி வழங்க வேண்டுமென கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்தினர்.



இதனையடுத்து அன்புமணி ராமதாஸை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்தப் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பேராசிரியர் தீரன், தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவபிரகாசம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை பாமக தலைவராக தேர்வு செய்யும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். எனவே பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.



அன்புமணி தலைவராக அறிவிக்கப்பட்டதும் கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மத்திய மாவட்ட செயலாளர்கள் கே.என்.சேகர், தலைவர் அனந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வாள் பரிசளித்தனர்.மேலும்,‘ஆளப்போகிறான் பாட்டாளி’, ‘2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்ற கோஷத்தையும் எழுப்பினார்கள்.


முன்னதாக கூட்டத்தில் தீர்மானத்தை வாசித்த ஜி.கே. மணி, “சோம்நாத் சாட்டர்ஜி, ஐ.நா. தலைவராக இருந்த பான் கி மூன் போன்றோர்களால் பாராட்டப்பெற்றவர் அன்புமணி ராமதாஸ்.மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்புகளில் பட்டியலின மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதியை காத்தவர் அன்புமணி.


மேலும் படிக்க | ஆணவப் போக்கு கட்சித் தலைவருக்கு அழகல்ல: அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்


பாமகவின் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றுகொள்வதன் மூலம் நம் கட்சியை அவர் புதிய உயரத்துக்கு எடுத்து செல்வார் .  எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்படுகிறார்” என பேசினார்.


மேலும் படிக்க | எஸ்.ஜே. சூர்யா-வுக்கு இந்த கோடிகள் வரி பாக்கியா ? எச்சரித்த நீதிமன்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR