பதவியை ராஜினாமா செய்யும் அன்புமணி? தைலாபுர தோட்டத்தில் பேச்சுவார்த்தை!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே உரசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது தைலாபுரத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்திக்க அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கௌரவத் தலைவர் ஜி கே மணி மற்றும் பாமக நிர்வாகிகள் தற்போது தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர். சமாதான குழு பேச்சுவார்த்தையை அடுத்து ராமதாசை சந்திக்க அன்புமணி தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்துள்ளார். மேலும் பாமகவின் முக்கிய நிர்வாகிகள் ஒருவர் ஒருவராக தோட்டத்திற்கு வருகை தந்து ஆலோசனை மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதி கட்ட முடிவு என்ன எடுக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ள கட்சி நிர்வாகிகள் ஆர்வமாக உள்ளனர்.
மேலும் படிக்க | சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - காவல்துறை முக்கிய எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2024 விடை கொடுப்போம்; 2025 யை வரவேற்போம் என்ற பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் அணி சங்க தலைவராக தனது பேரன் முகுந்தனை நியமிப்பதாக பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு மேடையில் அமர்ந்திருந்த பாமக தலைவர் டாக்டர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில அன்புமணிக்கும் ராமதாஸ்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் ஆரம்பித்த கட்சி நான் சொல்வதுதான் அனைவரும் கேட்க வேண்டும் அப்படி கேட்க விருப்பம் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு வெளியேறலாம் என ராமதாஸ் கூறினா.
இந்த நிலையில் ராமதாஸ் அன்புமணியும் கடும் வாக்குவாதம் ஈடுபட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் இதனால் ராமதாஸ் அணி அன்புமணியம் என பாமக இரண்டு அணிகளாக உடைய நிலை ஏற்பட்டுள்ளதால், பாமக நிர்வாகிகளிடையும் பாமக தொண்டர்களையும் பெரும் கலகலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜிகே மணி தலைமையில் குழு ஒன்றை அமைத்து சென்னை சென்று அன்புமணியை சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக பாமக மாநில இளைஞர் அணி பொறுப்பு அமைந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக காலியாகியுள்ள நிலையில் இந்த பதவிக்க ராமதாஸ் தனது பேரனை நியமிப்பதாக அறிவித்தார்.
அப்போது அன்புமணிக்கும் ராமதாசுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கார் மூலமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு தற்போது பாமக தலைவர் அன்புமணி வருகை தந்துள்ளார். அவருடன் பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் பலர் தாராபுரம் தோட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் முக்கிய நிர்வாகிகள் ஒருவர் உருவாக தோட்டத்திற்கு வருகை தந்து ஆலோசனை மேற்கோள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: துணை முதல்வர், அமைச்சருடன் குற்றவாளி!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ