நீட் தேர்வில் அரசு அலட்சியம் காட்டுகிறது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழக அரசு நீட் தேர்வு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டுமென்று தமிழ்நாடு தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது. ஆனால் மத்திய அரசோ ந விலக்கு கிடையாது என்பதில் தீவிரமாக இருக்கிறது.
இந்தச் சூழலில் நீட் தேர்வு அச்சம் காரணமாக அனிதா என்ற மாணவி 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த ஒரு மரணத்தோடு நீட் மரணங்கள் நிகழக்கூடாது என அனைவரும் நினைத்திருந்த சமயத்தில் மாணவர்களும், மாணவிகளும் தொடர்ந்து தற்கொலை செய்துவருகின்றனர்.
அந்த வரிசையில் அனிதாவின் ஊரான அரியலூரில் நிஷாந்தி என்ற மாணவி நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். நாளை நாடு முழுவதும் நீட் நடக்கும் சூழலில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறப்படும் என உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் அரியலூரைச் சேர்ந்த நிஷாந்தி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்கள்.
இவ்வளவுக்குப் பிறகும் இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் சலனமில்லாமல் இருப்பது ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது. தமிழக அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும்.
அதே நேரத்தில் நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதையும், மருத்துவம் மட்டுமே படிப்பல்ல என்பதையும் மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும். நீட்டுக்கு அஞ்சி மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ஆளுநரை வம்பு சண்டைக்கு இழுப்பதுதான் திமுகவின் வேலை - அண்ணாமலை காட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ