Annamalai Delhi Visit: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று விமான மூலம் டெல்லி புறப்பட்டார். டெல்லி கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"எந்த நகரங்கள் தூய்மையாக இருக்கிறதோ, அங்கு சுற்றுலா துறை வளர்ந்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'யாரிடமும் அறிக்கை கொடுக்கவில்லை'


மத்திய அரசு தூய்மைக்கு முன்னிரிமை அளித்து வருவதால், தமிழக அரசு  போட்டி போடாமல் இந்தியா திட்டமாக நினைத்து அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். திமுக பொய் பேசுவதற்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள்.


கூட்டணி முறிவு குறித்து என்னிடம்  எந்த அறிக்கையும், கேட்கவில்லை. இது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. ஒரு பையுடன் டெல்லி போகிறேன், யாரும் என்னிடம் அது கேட்கவில்லை. யாரிடமும் அறிக்கை கொடுக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஏழு, எட்டு மாதங்கள் இருக்கிறது. கட்சியை பலப்படுத்தும் பணியில் கவனம் செலுத்துகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் தன்மை எப்படி இருக்கும் என்பதை சம்பந்தப்பட்ட நேரத்தில் தேசிய தலைமை முடிவு செய்யும்" என்றார்.


அட்ஜெஸ்மென்ட் பாலிடிக்ஸ் கிடையாது


மேலும், அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமையும்போது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்விக்கு பின்னடைவு எதுவும் ஏற்படாது எனவும் அண்ணாமலை தெரிவித்தார். 2024 தேர்தலுக்கு முழு உறுதியுடன் இருப்பதாகவும், தினமும் மக்களை சந்திப்பதாகவும் 2024 மக்களவை  தேர்தலில் வலுவான இடத்தை பிடிப்பதாகவும், 57 சதவீத வாக்காளர்கள் 35 வயதுக்கு உட்பட்டு இருக்கின்றார்கள் அவர்கள் இன்ஸ்டாவில் வாழ்கின்றனர் எனவும் தெரிவித்தார். இப்போது தொலைக்காட்சி, பேப்பர் எல்லாம் யார் படிக்கின்றனர் எனவும் , இளைஞர்கள் வேறு உலகத்தில் வாழ்கின்றனர் என தெரிவித்தார்.


மேலும் படிக்க | பழனி கோவிலுக்கு செல்வோர் கவனத்திற்கு! இனி இவற்றை கொண்டுபோக முடியாது!


மக்களவை தேர்தலில் எத்தனை இடங்களில் கிடைக்கும் என்ற எண்ணிக்கையை சொல்ல விரும்பவில்லை எனவும், தேர்தல் நேரத்தில் இது சொல்லப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,"மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது, அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது. எனக்கு என தனி உலகம் இருக்கின்றது, அதில் வாழ்கின்றேன். அட்ஜெஸ்மென்ட் பாலிடிக்ஸ் அண்ணாமலையிடம் கிடையாது, என்னால் யாருக்காகவும் மாறமுடியாது. திமுகவை புகழ்பாடவே கம்யூனிஸ்ட் கட்சி இருக்கின்றது. கே.பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு கரும்புள்ளி. கம்யூனிஸ்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரியாக இருக்கின்றனர்" என்றார்.


இந்தியாவில் பாஜக மட்டுமே சுத்தமான கட்சி


மேலும், அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னதாக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் சொன்ன கருத்துக்கு, இன்னொரு முன்னாள் அமைச்சர் பதில் சொல்லி இருக்கிறார். அவர்களுக்குள் மாற்றி மாற்றி பதிலடி கொடுத்து கொள்கின்றனர். தமிழ்நாடு பாஜக தவறான பாதையில் செல்கின்றது என யாராவது சொன்னால், அதற்கு நேர் எதிரான திசையில் கட்சி பயணிக்கும். தமிழக பாஜக மீது அனைவருக்கும் கோபமாக இருக்கின்றனர். ஒரே ஒரு தேர்தல் பாஜகவிற்கு இருந்தால் 25 சதவீத வாக்கு சதவீதத்தை காட்டி, தமிழகத்தின் அரசியல் தலைகீழாக மாற்றிவிடும். இந்தியாவில் பாஜக மட்டும் தான் சுத்தமான கட்சியாக இருக்கின்றது" என்றார்.


பத்திரிகையாளரிடம் வாக்குவாதம்


அதிமுகவினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அண்ணாமலை பதிலளித்தார். பாஜக மாநில தலைவராக இல்லாமல் இருந்தால், கட்சியில் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு ஆவேசமான அண்ணாமலை, பத்திரிகையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 


மேலும் படிக்க | காலியாகும் திமுக கூடாரம்... நடுக்கத்தில் ஸ்டாலின் - பழ.கருப்பையா பராக்... பராக்...!


மரபை தாண்டினால் யாராக இருந்தாலும் விட மாட்டார் என தெரிவித்த அண்ணாமலை, இன்னிக்கும் நான் விவசாயியாக இருக்கின்றேன். முழு நேர அரசியல்வாதி கிடையாது என தெரிவித்தார். கோவையில் அரசு நிலத்தை அபகரித்ததாக பாஜக மாவட்ட தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறித்து மாவட்ட தலைவர் பதில் அளிப்பார் என தெரிவித்தார்.


டெல்லி செல்வது வழக்கம்தான்


"டெல்லியில் என்னை சேர் போட்டு உட்காரவைத்து கேள்வி கேட்கப் போகிறார்களா? டெல்லி சென்றாலும் இப்படியே தான், போகாவிட்டாலும் இப்படித்தான் இருப்பேன். என்னை எல்லாரும் எதிர்க்கிறீர்கள், அதுதான் என் வளர்ச்சிக்கு காரணம். இதை நான் மாற்றி கொள்ள விரும்பவில்லை. அரசியல் பல கோணங்கள்  இருக்கும். நான் நேர்மையாக இருக்கின்றேன். டெல்லி செல்வது வழக்கமான பணிக்காக, நடைபயணம் குறித்தும், நடை பயணத்தில் பங்கேற்க இருப்பவர்கள் குறித்தும் ஆலோசிப்பதற்காகவே செல்கிறேன். இரு வாரங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. அதிமுகவை நான் ஏன் விமர்சிக்க வேண்டும், கருத்து சொல்ல வேண்டும். நான் நடைபயணத்தில் கவனம் செலுத்துகிறேன். கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் கருத்து சொல்வார்கள்.


இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம்


அண்ணா குறித்து பேசியது கூட்டணி முறிவுக்கு காரணமாக இருக்கும் நிலையில், இதுகுறித்து தேசிய தலைமை இதுவரை என்னிடம் எதுவும் கேட்கவில்லை. என்னிடம் கேட்டால் பதில் சொல்வேன். தனித்துப் போட்டி என்பதற்குள் செல்ல விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் நிறைய கட்சிகள் இருக்கின்றது. கூட்டணிக்கான காலமும் நேரமும் இருக்கிறது. ஜெயிப்பதற்காகத்தான் போட்டியிடுவோம், தமிழகத்தில் நிறைய இடங்களில் ஜெயிப்போம். அதனால் தான் பிற கட்சிகள் பயந்து போய் இருக்கின்றன. அதிமுக சொல்வதற்கு எல்லாம் நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். இதற்கு எல்லாம் நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும். இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம். தமிழகத்தின் பல இடங்களில் ஜெயிப்போம்" என்றார். 


மேலும் படிக்க | தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டும் கர்நாடக மருத்துவமனைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ