நவம்பர் 29 ஆம் தேதி உருவாகக் கூடிய புதிய புயலால் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னைக்குத் தென்மேற்கே 95 கிலோமீட்டர் தொலைவில் உருவாக்கிய நிவர் புயல் (Nivar Cyclone) தொடர்ந்து வடமேற்குத் திசைநோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வுத் மையம் (India Meteorological Department) தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் பதினொன்றரை முதல் நேற்று அதிகாலை இரண்டரை மணி வரை புதுச்சேரி (Puducherry) மற்றும் காரைக்கால் அருகே கரையைக் கடந்தது. அப்போது பலத்த சூறைக்காற்று வீசியதுடன் அதீத கனமழையும் பெய்தது. 


புயலின் தாக்கத்தால் நேற்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாகத் தாம்பரத்தில் 31 சென்டிமீட்டரும், புதுச்சேரியில் 30 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், நேற்று காலை எட்டரை மணி நிலவரப்படி நிவர் புயல் புதுச்சேரிக்கு வடமேற்கே 85 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்குத் (Chennai) தென்மேற்கே 95 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாகக் குறிப்பிடதக்கது. 


ALSO READ | கஜா, நிவர் உட்பட தமிழகத்தை தாக்கிய அதிதீவிர புயல்கள் என்னென்ன?


வடமேற்குத் திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல் அடுத்த சில மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திர மாநிலப் பகுதிக்குள் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால், வடதமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யவும், ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 


இதை தொடர்ந்து வரும் 29 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 48-72 மணி நேரத்தில் தெற்கு வளைகுடாவில் புதிய குறைந்த அழுத்தம் உருவாகி மத்திய தமிழக கடற்கரையை நோக்கி நகரும். நிவர்  புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நவம்பர் 29 முதல் வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், மிக அதிக மழைப்பொழிவைப் பெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மைஅயம் அறிவித்து உள்ளது.


நவம்பர் 29 ஆம் தேதி உருவாகக் கூடிய குறைந்த அழுத்தப் பகுதி தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இயக்குநர் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார்.