தமிழ்க் கடவுள் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை பக்தர்கள் மகிழ்ச்சி.!
சிறப்பு வாய்ந்த நம் தமிழ் கடவுள் பழனி முருகனுக்கு தமிழ் மொழியில் நேற்றிலிருந்து அர்ச்சணை செய்ய ஆரம்பித்துள்ளனர். இது பக்தர்களுக்கு மட்டுமின்றி முருகனுக்கே மனம் மகிழ்ந்திருக்கும்.என்று எண்ணத் தோன்றுகிறது.
பழனி என்றாலே நம் எண்ண ஓட்டத்திற்கு வருவது பஞ்சாமிர்தமும் "தமிழ்க் கடவுள் பழனி மலை முருகனும் தான் அந்த அளவுக்கு நமக்கு அவை பரிச்சியமாகி விட்டது. பழனி முருகனுக்கு தமிழகம் மட்டுமின்றி நம் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் வெளிநாடுகளிலிருந்து என பல்லாயிரக் கணக்கானோர் ஆண்டு தோறும் "தைப்பூசத்திற்கு காவடி எடுத்து அலகு குத்தி நேர்த்திக்கடன் செய்வதற்காக வருகை தருகின்றனர்.
இப்படி சிறப்பு வாய்ந்த நம் தமிழ் கடவுள் பழனி முருகனுக்கு தமிழ் மொழியில் நேற்றிலிருந்து அர்ச்சணை செய்ய ஆரம்பித்துள்ளனர். இது பக்தர்களுக்கு மட்டுமின்றி முருகனுக்கே மனம் மகிழ்ந்திருக்கும்.என்று எண்ணத் தோன்றுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க பெரும்பான்மையாக ஆட்சி அமைத்தவுடன்.இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்,தமிழில் அர்ச்சனை என தடாலடியான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக "தமிழகம் முழுவதும் உள்ள "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறையினை கடந்த 5 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.இதனை சென்னையில் உள்ள "கபாலீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முதன் முதலாக தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். அவர் தெரிவித்தப்படி காஞ்சிபுரம்,திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் "தமிழில் அர்ச்சனை செய்யும் முறை ஆரம்பிக்கப்பட்டது.
ALSO READ | ₹250 கோடி மதிப்புள்ள சென்னை வடபழனி கோயில் நிலம் மீட்பு: அமைச்சர் சேகர் பாபு
தமிழில் அர்ச்சனை செய்வோரின் செல்போன் எண் மற்றும் அவரது பெயர் ஒவ்வொரு கோவிலிலும் "விளம்பர பலகை மூலம் வைக்கப்பட்டு அதில் எந்த அர்ச்சகர் இன்று அர்ச்சனை செய்யவுள்ளார் என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் "குடமுழுக்கு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசித்திப் பெற்ற பழனி முருகன் கோவில் கொரோனா காரணமாக சனி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அடைக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் கொரோனா தாக்கம் சமீப நாட்களாக குறைய ஆரம்பித்த காரணத்தால் இன்று காலை முதலே நடை திறக்கப்பட்டு முருகனை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கபட்டனர்.
இன்று முதல் "தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழிலும் அர்ச்சணை செய்ய ஆரம்பித்துள்ளதால் பக்தர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.
பழனி மலைக் கோவிலைப் போன்றே திருஆவினன் குடி,பெரியநாயகி அம்மன்,பெரியாவுடையார் கோவில்,மாரியம்மன் கோவில்களிலும் இன்று முதல் "தமிழில் அர்ச்சனை செய்யும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
ALSO READ | புராதன கோயில்களை அரசு பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR