ஏழைகள் இருக்கும் வரை கலைஞர் கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும்: அமைச்சர் மெய்யநாதன்
ஏழைகள் இருக்கும் வரை கலைஞர் கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும் , கலைஞர் கொண்டு வந்த இலவச கல்வியில் படித்துதான் நான் தற்போது அமைச்சராக இருக்கிறேன் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
ஏழைகள் இருக்கும் வரை கலைஞர் கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும் , கலைஞர் கொண்டு வந்த இலவச கல்வியில் படித்துதான் நான் தற்போது அமைச்சராக இருக்கிறேன் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
திராவிட அரசியல் கட்சிகள் கொண்டுவந்த இலவச திட்டங்களுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தற்போது இலவச திட்டங்கள் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் இருக்கும், கலைஞர் கொண்டுவந்த இலவச திட்டங்களால்தான் நான் இந்த நிலைமையில் இருக்கிறேன் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பணம் இருந்தால்தான் பாஜகவில் பதவி - முன்னாள் மாநில நிர்வாகி பரபரப்பு பேட்டி
மேலும் படிக்க | சென்னை வடபழனியில் தங்கும் விடுதியின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
நாகை மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7381 மாணவ மாணவிகளுக்கு 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மிதி வண்டிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து நாகை சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்தில் , நிரந்தர வீட்டிற்கான பட்டாக்களை அமைச்சர் வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் ., ஏழைகள் இருக்கும் வரை கலைஞர் கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும் என்றும் கலைஞர் கொண்டுவந்த இலவச கல்வியில் படித்துதான் நான் தற்போது அமைச்சராக இருக்கிறேன் என்றும் கூறினார்.
மேலும் படிக்க | அரசு விழாக்கள் பொழுதுபோக்கு அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் , சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, ஷாநவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க | எப்படி அரசியல் பண்ணுவது யோசிப்பது நான் இல்ல: பாஜக தலைவர் அண்ணாமலை பதற்றம்
மேலும் படிக்க | தமிழகத்தில் பாஜகவிற்கு 2 தலைவர்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நக்கல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ