உலகம் முழுவதிலும் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது இந்த கொரோனா வைரஸ். மக்கள் அனைவரும் பல மாதங்களுக்கு வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியிருந்த நேர்ந்தது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்து போனதைப் போன்ற தோற்றம் அவ்வபோது உருவானது. தற்போது மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், நம்மில் பலர் ரயில்கள் மூலமாக பயணிக்க தொடங்கியுள்ளோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் தற்போது கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் வரும் 23 ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக முழு விவரம் பின்வருமாறு:


மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேலைவாய்ப்பு!


1. கோவை- மேட்டுப்பாளையம் முன்பதிவு இல்லாத ஊட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.30 மணிக்கு சென்றடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை வந்து சேரும்.


2. சேலம்- விருத்தாச்சலம்- சேலம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேலத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு விருத்தாச்சலத்திற்கு பகல் 1.05 மணிக்கு சென்றடைகிறது. விருத்தாச்சலத்தில் இருந்து பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு சேலம் வந்தடைகிறது.







3. மயிலாடுதுறை-தஞ்சாவூர்- மயிலாடுதுறை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 9.10 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல தஞ்சாவூரில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு 8.30 மணிக்கு வந்து சேருகிறது.


4. காட்பாடி- விழுப்புரம்- காட்பாடி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் காட்பாடியில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.10 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. விழுப்புரத்தில் இருந்து இரவு 7.05 மணிக்கு புறப்பட்டு இரவு 11.05 மணிக்கு காட்பாடி வந்து சேருகிறது.


மேலும் படிக்க | Indian Railways: அப்பாடா, இனி டிக்கெட் முன்பதிவின் போது இதை செய்ய வேண்டாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR