பாஜகவில் பதவி பெற பல லட்ச ரூபாய் பேரம்: குமுறும் பெண் நிர்வாகி!
தமிழக பாஜாகாவில் பதவி மற்றும் பொறுப்பு பெற பல லட்சம் கொடுக்க வேண்டும் என்று ஆடியோ ஒன்று பரவி வருகிறது.
மத்தியில் ஆட்சியில் இருக்க கூடிய பிஜேபி, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் பிஜேபி காலூன்ற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது. ஆளுங்கட்சி எதிர்ப்பு, போராட்டம், மறியல் என மக்கள் கண்ணில் படும் அளவிற்கு தினமும் ஏதாவது ஒரு செயலை செய்து வருகிறது. தமிழக பிஜேபியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் அண்ணாமலையும் தினமும் அறிக்கை, பதிலடி என்று செய்து வருகிறார். தற்போது தமிழகத்தில் பிஜேபிக்கு 4 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்.
மேலும் படிக்க | "SC கையில ஸ்கூல் போக போகுது" பள்ளியில் ஜாதி வெறியை வளர்க்கும் டீச்சர்!
இவ்வாறு தமிழகத்தில் கட்சியை வளர்க்க அண்ணாமலை போராடி வரும் நிலையில், பிஜேபி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபவது போன்ற தொடர் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது பிஜேபி-யில் பொறுப்பு பெற பல லட்சங்கள் கொடுக்க வேண்டும் என்று இரு நிர்வாகிகள் பேசும் ஒரு போன் ஆடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த ஆடியோவில், பெண் நிர்வாகி ஒருவர், தற்போது தான் மாவட்ட செயலாளராக உள்ளதாகவும் மாநில செயலாளர் பொறுப்பிற்கு 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை கேட்பதாகவும் கூறுகிறார்.
பிஜேபி கட்சியை சேர்ந்த ரங்கா என்பவர் தான் பணம் கேட்பதாக அந்த பெண் குற்றம் சாட்டுகிறார். மறுமுனையில் பேசுபவர் இது குறித்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் கொடுக்குமாறு சொல்கிறார். அந்த பெண்ணும் அண்ணாமலை அவர்களை பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது, பிரச்சாரத்திற்கு வெளி ஊர் சென்றுவிடுவதால் அவரை பார்க்க முடியவில்லை என்று கூறுகிறார். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க துடிக்கும் ஒரு தேசிய கட்சியில் நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்குவதில் இவ்வளவு குளறுபடி நடைபெறுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் படிக்க | சென்னை வானகரத்தில் திட்டமிட்டபடி நடைபெறுமா அதிமுக பொதுக்குழு ?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR