தூத்துக்குடியில் இனி அச்சிட்ட காகிதங்களில் வடை பஜ்ஜிக்கு தடை
தூத்துக்குடியில் உள்ள உணவகங்களில் இன்று முதல் அச்சிட்ட காகிதங்களில் வடை பஜ்ஜி போன்ற உணவு பதார்த்தங்களை விற்பனை செய்ய தடை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
உணவகங்களில் வடை பஜ்ஜி போன்ற உணவு பதார்த்தங்கள் அச்சிட்ட காகிதங்களில் மடித்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது உணவு பொருட்களை இவ்வாறு வழங்குவது பொதுமக்களின் உடல் நலத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும் என்பதோடு அச்சு மையான காரியத்தில் இருந்து புற்றுநோய் போன்றவை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே இதனைத் தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் அச்சிட்ட காகிதங்களில் உணவு பொருட்களை மடித்து விற்பனை செய்யப்படுவதற்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார் இதனை மீறி உணவகங்களில் அச்சிட்ட காகிதத்தில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார் மேலும் இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் ஒன்றையும் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டார்.
மேலும் படிக்க | மேடையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே உயிர்விட்ட நாடகக் கலைஞர் - உருக்கமான வீடியோ!
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள உணவகங்கள், டீக்கடைகளில் வாழை இழையிலேயே தின்பண்டங்கள் வைத்து வழங்கப்படுகிறது.இதனால் வாழை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உணவுப் பொருட்களின் பாதுகாப்பு குறித்து தற்போது வியாபாரிகளிடம் விழிப்புணர்வு எழுந்துள்ள நிலையில், பொதுமக்களும் அதை வரவேற்றுள்ளனர்.
மேலும் படிக்க | மாணவியின் உடல் மீண்டும் போஸ்ட் மார்டம் | தந்தை கண்முன் நடத்த நீதிமன்றம் உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ