கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சில தினங்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துவிட்டு ஏன் போராட்டத்தில் ஈடுபட்டீர்கள் என கடிந்து கொண்டார். போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளித்தது யார் என்று கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதை சுட்டிக்காட்டினர். பிரேத பரிசோதனைக்கு பின் தற்கொலைக்கு தூண்டியதாக சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது
வழக்கை விசாரித்த நீதிபதிகள் வன்முறையின் பின்னணியில் இருப்பது யார் என்பதை சிறப்பு படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். அவர்கள் சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் கூறினர். மேலும் சமூக வலைதளங்கள் சுயேச்சையாக விசாரணை நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும் இதுபோன்ற இயற்கைக்கு முரணான இறப்புகளை சிபிசிஐடி-தான் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் உடலை மறு உடற்கூராய்வு செய்யவும் பிரேத பரிசோதனையின் போது தந்தை அவரது வக்கீலுடன் உடன் இருக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். பிரேத பரிசோதனைக்கு பின் வேறு எந்த பிரச்னையும் செய்யாமல் மாணவியின் உடலை அவரது தந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். வழக்கின் விசாரணை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR