Bank Holidays: 2021 ஜனவரியில் வங்கிகள் என்றெல்லாம் மூடப்பட்டிருக்கும்?
குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் மகாத்மா காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று தேசிய விடுமுறை நாட்களை இந்தியா அனுசரிக்கிறது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு நாளும் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த பண்டிகைகளின் போது மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் சந்தித்து மகிழ்கின்றனர்.
இந்தியாவில் வங்கி விடுமுறைகள் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களால் பட்டியலிடப்பட்டுள்ளன. இது நெகோஷியபில் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் சட்டம், 1881 இன் கீழ் உள்ளது. விடுமுறை பட்டியல் வங்கித் துறைகளுக்கானது. அன்று ஊழியருக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகின்றது. மேலும் அன்று வங்கிகள் செயல்படுவதில்லை. இருப்பினும், வங்கி விடுமுறை நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் ATM-கள் வழக்கம் போல் பொதுமக்களுக்காக செயல்படுகின்றன.
இந்தியாவில் (India) இரண்டு வகையான வங்கி விடுமுறைகள் உள்ளன. அவை தேசிய விடுமுறை மற்றும் அரசு விடுமுறை. குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் மகாத்மா காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று தேசிய விடுமுறை நாட்களை இந்தியா அனுசரிக்கிறது. வங்கிகளைத் தவிர, பிற வகை நிதி நிறுவனங்களும் இந்த நாளில் மூடப்பட்டுள்ளன.
ஜனவரி மாதத்தில், புத்தாண்டு தினம் மற்றும் குடியரசு தினம் (Republic Day) உட்பட நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் வங்கி விடுமுறைகள் உள்ளன. பொதுவாக இரண்டாம் மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கி விடுமுறைகள் உள்ளன.
தமிழகத்தைப் (Tamil Nadu) பொறுத்தவரை, 2021 ஜனவரி மாதத்தில், வழக்கமான இரண்டாம் நான்காம் சனிக்கிழமைகளைத் தவிர, ஜனவரி 1, குடியரசு தினம், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்கள் என அடுத்த மாதம் வங்கி விடுமுறை நாட்கள் (Bank Holidays) அதிகமாக இருப்பதால், மக்கள் முன்னரே வங்கி சென்று செய்யும் பணிகளை அதற்கேற்றபடி திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
தேதி | நாள் | விடுமுறை |
ஜனவரி 1, 2021 | வெள்ளி | புத்தாண்டு |
ஜனவரி 9, 2021 | சனி | இரண்டாவது சனிக்கிழமை |
ஜனவரி 14, 2021 | வியாழன் | பொங்கல் |
ஜனவரி 15, 2021 | வெள்ளி | திருவள்ளுவர் தினம் |
ஜனவரி 16, 2021 | சனி | உழவர் திருநாள் |
ஜனவரி 23, 2021 | சனி | நான்காவது சனிக்கிழமை |
ஜனவரி 26, 2021 | செவ்வாய் | குடியரசு தினம் |
ALSO READ: உடனே இதை செய்யுங்கள்.. அடுத்த 3 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை..!
வங்கி விடுமுறைகள் தவிர, நாட்டில் தபால் அலுவலக விடுமுறைகளும் உள்ளன. 1688 ஆம் ஆண்டில் வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்தியாவில் தபால் சேவையைத் தொடங்க முன்முயற்சி எடுத்தபோது தபால் துறை முதலில் தொடங்கியது. தபால் அலுவலக விடுமுறைகளும் வங்கி விடுமுறைகளைப் போலவே முக்கியமாக கருதப்படுகின்றன.
வங்கி விடுமுறையில் வங்கிகள் மூடப்படுவதைப் போலவே, தபால் நிலையங்களும் (Post Office) அவற்றின் குறிப்பிட்ட நாளில் மூடப்பட்டிருக்கும். தபால் அலுவலக விடுமுறைகளின் பட்டியல் வங்கி விடுமுறைகளின் பட்டியலுடன் கிட்டத்தட்ட ஒத்திருக்கிறது.
ALSO READ: Gold Loan-ல் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது SBI: முழு விவரம் உள்ளே
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR