Fake Helicopter Booking Fraud: சுற்றுலா பயணிகளை குறிவைத்து போலி ஹெலிகாப்டர் முன்பதிவு மோசடியில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகள் குறித்து தமிழ்நாடு சைபர் காவல்துறை பிரிவு தரப்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,"புகழ்பெற்ற சார் கோயில்கள் மற்றும் புனித தலமான வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக, ஆன்லைன் ஹெலிகாப்டர் டிக்கெட் முன்பதிவு சேவைகளை வழங்குவதாகக் கூறி மோசடி செய்பவர்கள் போலியாக இணையதளங்களை உருவாக்குகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுபோன்ற முன்பதிவு இணையதளங்களைத் தேடும்போது, தேடல் முடிவுகளில் தங்கள்  இணையதளங்களை முதன்மையாக காண்பிக்க, மோசடி செய்பவர்கள் தேடுபொறி மேம்படுத்தல் நுட்பங்களை (search engine optimization technique) பயன்படுத்துகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அத்தகைய வலைத்தளங்களின் இணைப்புகளைக் கிளிக் செய்யும் போது, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான அவர்களின் தனிப்பட்ட தகவல் மற்றும் நிதி விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகிறார்கள். 


மேலும் படிக்க | காங்கிரேஜ் மாடுகள் ஒரு புதையல்... மகள் பாசத்தில் பால் பண்ணை வைத்த பட்டதாரி தந்தை - ஒரு வெற்றி கதை!


போலி PDF டிக்கெட்டுகள்


விவரங்களை உள்ளிடும்போது, அந்த இணைய பக்கம் API வழியாக WhatsApp சேட்டுக்கு திருப்பி விடப்படும். மோசடி செய்பவர்கள் தங்களை ஹெலிகாப்டர் புக்கிங் நிறுவனத்தின் நிர்வாகிகள் போல் காட்டிக்கொண்டு, முன்பதிவைத் தொடர பயணிகளிடம் பணம் செலுத்தும் விவரங்களைப் பற்றி கேட்கின்றனர்.  


மேலும், மோசடி செய்பவர்கள் இந்திய தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகின்றனர். சட்டப்பூர்வ நிறுவனமாகத் தோன்றுவதற்காக புனித ஆலயங்கள் அல்லது தெய்வத்தின் படங்களைக் காட்டுகின்றனர். இறுதியாக, மோசடி செய்பவர்கள் பயணிகளை UPI மூலம் பணம் செலுத்துமாறு கேட்கிறார்கள். பணம் செலுத்தியவுடன் போலி PDF டிக்கெட்டுகள் பயணிகளுக்கு அனுப்பப்படுகின்றன.  


எச்சரிக்கையாக இருப்பது எப்படி?


இதற்குப் பிறகு, மோசடி செய்பவர்கள் தங்கள் தொலைபேசிகளை அணைத்துவிட்டு, தொடர்பு கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்த மோசடி குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு, கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜென்ரல் சஞ்சய் குமார், ஐபிஎஸ் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.


1. எப்போதும் நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் நிறுவனத்தின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்கவும்.
2. பாதுகாப்பு இணைப்புகளை தொடர்ந்து அப்டேட் செய்து வைத்திருக்கவும்.
3. பாதுகாப்பான இணையதளங்களுக்கான முகவரிப் பட்டியில் உள்ள பேட்லாக் ஐகானை எப்போதும் சரிபார்க்கவும்.
4. சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள்/செய்திகளின் இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள். ஏனெனில் அவை தவறான முயற்சிகளுக்காக செய்யப்பட்ட பக்கங்களுக்கு செல்ல வழிவகுக்கும்.
5. தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல் போர்டல், www.cybercrime.gov.in பக்கத்தில், சைபர் கிரைம் மோசடிகளைப் புகாரளிக்கவும். பாதுகாப்பு அம்சங்கள் பற்றி மேலும் அறிய Twitter, Facebook மற்றும் Instagram இல் @tncybercrimeoff பக்கத்தை பின்தொடரவும். 


மேலும் படிக்க | 7 ஆண்டுகள் முன்பு நடந்த கொலைக்கு பழி தீர்த்தோம்.. பாஜக பிரமுகர் கொலையில் திருப்பம்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ